• Jul 08 2026

டெங்கு தடுப்பூசி விரைவில் அறிமுகம் – அடுத்த 4 வாரங்கள் மிகுந்த அவதானம்! அமைச்சர் அறிவிப்பு

Chithra / Jul 7th 2026, 9:49 am
image


டெங்கு நோய் குறித்து வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்துவரும் நான்கு வாரங்களுக்கு மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் .


நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.


அத்துடன் டெங்கு நோய்க்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசியை நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


நாட்டில் இதுவரையில் டெங்கு நோயால் 61,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் மாத்திரம் 5,663 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பதில் இயக்குனர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

டெங்கு தடுப்பூசி விரைவில் அறிமுகம் – அடுத்த 4 வாரங்கள் மிகுந்த அவதானம் அமைச்சர் அறிவிப்பு டெங்கு நோய் குறித்து வெளியான அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்துவரும் நான்கு வாரங்களுக்கு மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார் .நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.அத்துடன் டெங்கு நோய்க்காக உருவாக்கப்பட்ட தடுப்பூசியை நாட்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.நாட்டில் இதுவரையில் டெங்கு நோயால் 61,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த மாதத்தின் முதல் 5 நாட்களில் மாத்திரம் 5,663 டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பதில் இயக்குனர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement