வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
நாட்டில் பல பகுதிகளில், உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறித்த வெப்பநிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமேற்கு, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதுமானளவு நீரை அருந்துமாறும், இயலுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை. வெப்பமான வானிலை குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.நாட்டில் பல பகுதிகளில், உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.குறித்த வெப்பநிலை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.வடமேற்கு, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய அளவில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதுமானளவு நீரை அருந்துமாறும், இயலுமான வரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.