• Nov 06 2024

ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்து விலகுகிறார் தம்மிக்க...! வெளியான அதிரடித் தகவல்

Chithra / Jan 20th 2024, 1:21 pm
image

Advertisement

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடத் தயார் என அறிவித்திருந்த பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா அந்த போட்டி களத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

மொட்டு கட்சியினால் தன்னிடம் 10 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த 10 நிபந்தனைகளை நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தார்.

எனினும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடகங்களில் பிரசாரம் செய்வதை கருத்திற்கொண்டு, 

தம்மிக்க பெரேரா தனது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பில் இதுவரை ரணில் எதனையும் தெரிவிக்கவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்மானிக்க ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளார்.

இதன்படி, அவருக்கு தீர்மானம் எடுப்பதற்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க பொதுஜன பெரமுனவும் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


ஜனாதிபதி தேர்தல் களத்திலிருந்து விலகுகிறார் தம்மிக்க. வெளியான அதிரடித் தகவல்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியிடத் தயார் என அறிவித்திருந்த பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா அந்த போட்டி களத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.மொட்டு கட்சியினால் தன்னிடம் 10 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த 10 நிபந்தனைகளை நிறைவேற்ற தான் தயாராக இருப்பதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தார்.எனினும்,  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊடகங்களில் பிரசாரம் செய்வதை கருத்திற்கொண்டு, தம்மிக்க பெரேரா தனது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அறிவித்திருந்த போதிலும், அது தொடர்பில் இதுவரை ரணில் எதனையும் தெரிவிக்கவில்லை.எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்மானிக்க ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளார்.இதன்படி, அவருக்கு தீர்மானம் எடுப்பதற்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரை கால அவகாசம் வழங்க பொதுஜன பெரமுனவும் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement