குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி போலி தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதிவான் விடுமுறையில் சென்றுள்ளமையினால் குற்றப்பத்திரிக்கை வாசிப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் டயனான கமகேவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முன்னெடுக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல தெரிவித்துள்ளார்.
டயனா கமகேவுக்கு மீண்டும் சிக்கல் - CIDயினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி போலி தகவல்களை சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் டயனா கமகேவுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுகுற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.பிரதம நீதிவான் விடுமுறையில் சென்றுள்ளமையினால் குற்றப்பத்திரிக்கை வாசிப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து முன்னாள் அமைச்சர் டயனான கமகேவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை வாசிப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முன்னெடுக்கப்படும் என கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல தெரிவித்துள்ளார்.இதேவேளை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள நபரின் இராஜதந்திர கடவுச்சீட்டை நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.