• May 10 2026

இலங்கையை இன்று உலுக்கிய விபத்துக்கள் - ஒருவர் பலி! பலர் காயம்

Chithra / May 10th 2026, 2:41 pm
image

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்தார். 


கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 


விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியை உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவராவார். 


விபத்து தொடர்பில் லொறி சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த மற்றும் கசாகல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 154 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். 


காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


பாணந்துறை பகுதியைச் சேர்ந்த மின்சார சபை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. 


இந்த மோதலில் குறித்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

இலங்கையை இன்று உலுக்கிய விபத்துக்கள் - ஒருவர் பலி பலர் காயம் கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் உடுதும்பர, நிசருவ பகுதியில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்தார். கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், அதற்கு எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியை உடுதும்பர வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவராவார். விபத்து தொடர்பில் லொறி சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த மற்றும் கசாகல ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட 154 ஆவது கிலோமீற்றர் மைல்கல்லுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தற்போது தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாணந்துறை பகுதியைச் சேர்ந்த மின்சார சபை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு கதிர்காமம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, முன்னால் சென்ற லொறியின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இந்த மோதலில் குறித்த லொறி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement