தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பியதற்காக தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஒளிபரப்பு உரிமங்களை வழங்குவதற்கான முறையான அதிகாரியாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் குறித்த ஊடகவலையமைப்பிற்கும் இடையே தொடர்ச்சியான பொது மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தப்படாத மற்றும் தவறான செய்திகளை ஒளிபரப்பியதாக அதிகாரிகள் மீண்டும் குறித்த ஊடக வலையமைப்பை குற்றம்சாட்டி வருகின்றனர் .
தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கை - இலங்கை பொலிஸார் தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பியதற்காக தனியார் ஊடக வலையமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி, ஒளிபரப்பு உரிமங்களை வழங்குவதற்கான முறையான அதிகாரியாக, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கும் குறித்த ஊடகவலையமைப்பிற்கும் இடையே தொடர்ச்சியான பொது மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உறுதிப்படுத்தப்படாத மற்றும் தவறான செய்திகளை ஒளிபரப்பியதாக அதிகாரிகள் மீண்டும் குறித்த ஊடக வலையமைப்பை குற்றம்சாட்டி வருகின்றனர் .