• Apr 16 2026

கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க கலந்துரையாடல்!

Chithra / Feb 20th 2026, 9:21 pm
image

 

யாழ். மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று  காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கல்லுண்டாயில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்குக் காரணமாக இடம்பெயரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. 

இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினரால் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது நிலம் நிரவுதல் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலின்போது, அருகிலுள்ள கொத்துக்கட்டிக்குளத்தைத் தூர்வாரி, அங்கிருந்து பெறப்படும் மண்ணைப் பயன்படுத்தி கல்லுண்டாய் குடியேற்றப் பகுதியில் நிலம் நிரவுதல் வேலைகளை முன்னெடுப்பது குறித்தும், குடியேற்றத் திட்டத்துக்கு அண்மையாகச் செல்லும் வாய்க்காலைத் தூர்வாருவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. 

மேலும், கொத்துக்கட்டிக்குளத்தைத் தூர்வாரியதன் பின்னர், எதிர்காலத்தில் அதன் பராமரிப்புப் பணிகளை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையிடம் கையளிப்பது தொடர்பான யோசனையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் என்பன ஒன்றிணைந்து ஆராய்ந்து, அதற்கான துரித திட்ட மதிப்பீட்டு முன்மொழிவை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள், யாழ். மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்க கலந்துரையாடல்  யாழ். மாவட்டத்தின் கல்லுண்டாய் பகுதியில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கிலான விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று  காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.கல்லுண்டாயில் குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் ஒவ்வொரு மழைக் காலத்திலும் வெள்ளப் பெருக்குக் காரணமாக இடம்பெயரும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. இதற்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், இது தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையினரால் விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது நிலம் நிரவுதல் தொடர்பான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.இக்கலந்துரையாடலின்போது, அருகிலுள்ள கொத்துக்கட்டிக்குளத்தைத் தூர்வாரி, அங்கிருந்து பெறப்படும் மண்ணைப் பயன்படுத்தி கல்லுண்டாய் குடியேற்றப் பகுதியில் நிலம் நிரவுதல் வேலைகளை முன்னெடுப்பது குறித்தும், குடியேற்றத் திட்டத்துக்கு அண்மையாகச் செல்லும் வாய்க்காலைத் தூர்வாருவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், கொத்துக்கட்டிக்குளத்தைத் தூர்வாரியதன் பின்னர், எதிர்காலத்தில் அதன் பராமரிப்புப் பணிகளை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையிடம் கையளிப்பது தொடர்பான யோசனையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளை, சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் என்பன ஒன்றிணைந்து ஆராய்ந்து, அதற்கான துரித திட்ட மதிப்பீட்டு முன்மொழிவை விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள், யாழ். மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ். மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement