• Nov 24 2024

பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றி...! தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்- ஊதிய உயர்வுக்கு இணக்கம்...!

Sharmi / Jun 25th 2024, 3:47 pm
image

பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில தெரிவித்தார்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம் தீர்மானித்திருந்தது.

இது தொடர்பான கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (24) பிற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில தெரிவித்தார். 


பிரதமருடனான கலந்துரையாடல் வெற்றி. தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்- ஊதிய உயர்வுக்கு இணக்கம். பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில தெரிவித்தார்.சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு இலங்கை நிர்வாக சேவை சங்கம் தீர்மானித்திருந்தது.இது தொடர்பான கோரிக்கைகள் தொடர்பில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (24) பிற்பகல் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் மகேஷ் கம்மன்பில தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement