யாழ் மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக, வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதி ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த புதன்கிழமை சில கிராம அலுவலர் பகுதிகளில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய J/171 ,J/159 ,J/165 J/167,J/158 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்துகொண்டு ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கியிருந்தனர்.
இதில் கிராமங்களில் Box, ஒலிபெருக்கியை வாடகைக்கு அமர்த்தி அமர்த்துபவர்கள் கலந்து கொண்டதுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
மேலும் எதிர்காலத்தில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் தாம் ஆழ்ந்த கரிசனை செலுத்துவதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடல். யாழ் மாவட்ட செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக, வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட பகுதி ஆலயங்களில் ஒலிபெருக்கி பாவனை கட்டுப்படுத்துவது தொடர்பாக கடந்த புதன்கிழமை சில கிராம அலுவலர் பகுதிகளில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.பிரதேச செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய J/171 ,J/159 ,J/165 J/167,J/158 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதில் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்துகொண்டு ஒலிபெருக்கி பாவனை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கியிருந்தனர்.இதில் கிராமங்களில் Box, ஒலிபெருக்கியை வாடகைக்கு அமர்த்தி அமர்த்துபவர்கள் கலந்து கொண்டதுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.மேலும் எதிர்காலத்தில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்துவது தொடர்பில் தாம் ஆழ்ந்த கரிசனை செலுத்துவதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.