மாற்றுத்திறனாளிகளுக்கான திருகோணமலை மாவட்ட சுய உதவிக் குழுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் இன்று இடம்பெற்றது
இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் கலந்து கொண்ட சகல பிரதேச மட்ட சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது
அத்துடன் சுய உதவிக் குழுக்களில் உள்ள அங்கத்தவர்களை வலுப்படுத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை எவ்வாறு பெற்றுக்கொள்வது மற்றும் அவர்கள் தொடர்பான தரவுகளை இற்றைப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் சுய உதவிக் குழுக்கள் மூலம் மாற்று திறனாளிகளை வலுப்படுத்தல் இலகுவாக இருக்கும் எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய், பட்டினமும் சூழலும் இவெருகல்,கோமரன்கடவெல குச்சவெளி மற்றும் மொறவெவ பிரதேச சுய உதவிக் குழுக்கள் பங்கு பற்றியதுடன் அவர்களின் 2024 ஆண்டுக்குரிய முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற சுப அபிமானி போட்டி தொடர்பான முழுமையான அறிவுறுத்தல்கள் சகல சுய உதவிக் குழுக்களுக்கும் வழங்கப்பட்டது
இதன்போது சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் தவராசா பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுகசேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட சுய உதவிக் குழுக் கூட்டம் திருமலையில் முன்னெடுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான திருகோணமலை மாவட்ட சுய உதவிக் குழுக் கூட்டம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் இன்று இடம்பெற்றதுஇதன்போது மேலதிக அரசாங்க அதிபர் கலந்து கொண்ட சகல பிரதேச மட்ட சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுஅத்துடன் சுய உதவிக் குழுக்களில் உள்ள அங்கத்தவர்களை வலுப்படுத்துவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியை எவ்வாறு பெற்றுக்கொள்வது மற்றும் அவர்கள் தொடர்பான தரவுகளை இற்றைப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் எதிர்காலத்தில் சுய உதவிக் குழுக்கள் மூலம் மாற்று திறனாளிகளை வலுப்படுத்தல் இலகுவாக இருக்கும் எனவும் கூறினார்.இந்நிகழ்வில் தம்பலகாமம், மூதூர், கிண்ணியா, கந்தளாய், பட்டினமும் சூழலும் இவெருகல்,கோமரன்கடவெல குச்சவெளி மற்றும் மொறவெவ பிரதேச சுய உதவிக் குழுக்கள் பங்கு பற்றியதுடன் அவர்களின் 2024 ஆண்டுக்குரிய முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற சுப அபிமானி போட்டி தொடர்பான முழுமையான அறிவுறுத்தல்கள் சகல சுய உதவிக் குழுக்களுக்கும் வழங்கப்பட்டதுஇதன்போது சமூக சேவைகள் மாவட்ட இணைப்பாளர் தவராசா பிரணவன், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமுகசேவை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.