ஸ்வீடனின் மால்மோ நகரில் நடத்தப்பட்ட ஒரு நீண்டகால ஆய்வு, அதிக கொழுப்புள்ள சீஸ் மற்றும் கிரீம் போன்ற பால் பொருட்கள் டிமென்ஷியாவிலிருந்து மூளைக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கக்கூடும் எனக் கூறுகிறது.
இருப்பினும், இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டாம் என உலகளாவிய நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சுமார் 28,000 பேரை 25 ஆண்டுகள் வரை பின்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, Neurology இதழில் வெளியிடப்பட்டது.
தினமும் 50 கிராம் அல்லது அதற்கு மேல் அதிக கொழுப்புள்ள சீஸ் சாப்பிட்டவர்களுக்கு, குறைவாக சாப்பிட்டவர்களை விட டிமென்ஷியா அபாயம் 13% குறைவாக இருந்தது.
தினமும் 20 கிராம் (சுமார் 1.4 தேக்கரண்டி) அதிக கொழுப்புள்ள கிரீம் எடுத்தவர்களுக்கு, எதையும் எடுத்துக்கொள்ளாதவர்களை விட 16% குறைவான அபாயம் காணப்பட்டது.
ஆய்வின் மூத்த ஆசிரியரும், ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான டாக்டர் எமிலி சோனெஸ்டெட்,
“சீஸ் டிமென்ஷியாவைத் தடுக்கிறது என்று இது நிரூபிக்கவில்லை. ஆனால், அதிக கொழுப்புள்ள அனைத்து பால் பொருட்களும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை இது சவாலாகவுள்ளது,” என தெரிவித்துள்ளார்.
ஹார்வர்ட் டிஎச் சான் பொது சுகாதாரப் பள்ளியின் ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் டாக்டர் வால்டர் வில்லெட் உள்ளிட்ட பலர், இந்த ஆய்வின் முடிவுகள் வலுவானவை அல்ல எனக் கூறுகின்றனர்.
அவர்களின் முக்கிய காரணங்களாக,25 ஆண்டுகளில் உணவு மாறியிருக்க வாய்ப்பு அதிகம்,பல உணவுகள் ஆய்வு செய்யப்பட்டதால், சீஸ் தொடர்பான முடிவு தற்செயலாக இருக்கலாம் என்கின்றனர்.
தைபே மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் தியான்-ஷின் யே,“சீஸ் நேரடியாக நரம்புகளை பாதுகாக்கிறது என்பதற்குப் பதிலாக, சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விட இது குறைவான தீங்கு விளைவிக்கும் தேர்வாக இருக்கலாம்,”என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, சீஸ் சாப்பிட்டதால் அல்ல, சீஸ் மாற்றிய உணவுகள் காரணமாக அபாயம் குறைந்திருக்கலாம்.
இந்த ஆய்வில்,குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், மோர், போன்றவற்றுக்கு டிமென்ஷியாவுக்கு எதிரான எந்தப் பாதுகாப்பும் இல்லை மேலும், அவற்றை அதிகம் எடுத்தவர்களுக்கு நீரிழிவு ,கொலஸ்ட்ரால் கோளாறு,இதய நோய் அதிகமாக இருந்ததாக, தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் டேவிட் காட்ஸ் தெரிவித்தார்.
நரம்பியல் நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் ஐசக்சன் கூறுகையில்:
ஸ்வீடனில் உள்ள பசுக்கள் பெரும்பாலும்புல் மேய்வதால், பால் மற்றும் சீஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கலாம்.
இவை மூளைக்கு நல்லவை என நம்பப்பட்டாலும், அல்சைமர் அபாய மரபணு உள்ளவர்களில் எதிர்பார்த்த பலன் தெளிவாக இல்லை.
இந்த முடிவுகள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நேரடியாக பொருந்தாது என சோனெஸ்டெட் ஏற்றுக்கொண்டார்.
“ஸ்வீடனில் அதிகம் உண்ணப்படுவது கடினமான, புளிக்க வைக்கப்பட்ட சீஸ் அமெரிக்காவில் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட சீஸ்,” என்று அவர் கூறினார்.
அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் டிமென்ஷியாவைத் தடுக்கின்றன என்று உறுதியாகக் கூற முடியாது.அதிக கொழுப்பு உணவுகளை அதிகரிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கவில்லை
மூளை ஆரோக்கியத்திற்கு இன்னும் நம்பகமான வழி காய்கறிகள்,பழங்கள்,முழுதானியங்கள்,மீன், பருப்பு, நல்ல எண்ணெய்கள் மத்தியதர (Mediterranean) உணவுமுறை தான் இன்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பான தேர்வாக உள்ளது.
அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் டிமென்ஷியா நோயை தடுக்குமா -ஆய்வில் வெளிப்பட்ட விடயங்கள் ஸ்வீடனின் மால்மோ நகரில் நடத்தப்பட்ட ஒரு நீண்டகால ஆய்வு, அதிக கொழுப்புள்ள சீஸ் மற்றும் கிரீம் போன்ற பால் பொருட்கள் டிமென்ஷியாவிலிருந்து மூளைக்கு ஓரளவு பாதுகாப்பு அளிக்கக்கூடும் எனக் கூறுகிறது.இருப்பினும், இந்த முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டாம் என உலகளாவிய நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.சுமார் 28,000 பேரை 25 ஆண்டுகள் வரை பின்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, Neurology இதழில் வெளியிடப்பட்டது.தினமும் 50 கிராம் அல்லது அதற்கு மேல் அதிக கொழுப்புள்ள சீஸ் சாப்பிட்டவர்களுக்கு, குறைவாக சாப்பிட்டவர்களை விட டிமென்ஷியா அபாயம் 13% குறைவாக இருந்தது.தினமும் 20 கிராம் (சுமார் 1.4 தேக்கரண்டி) அதிக கொழுப்புள்ள கிரீம் எடுத்தவர்களுக்கு, எதையும் எடுத்துக்கொள்ளாதவர்களை விட 16% குறைவான அபாயம் காணப்பட்டது.ஆய்வின் மூத்த ஆசிரியரும், ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான டாக்டர் எமிலி சோனெஸ்டெட்,“சீஸ் டிமென்ஷியாவைத் தடுக்கிறது என்று இது நிரூபிக்கவில்லை. ஆனால், அதிக கொழுப்புள்ள அனைத்து பால் பொருட்களும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தை இது சவாலாகவுள்ளது,” என தெரிவித்துள்ளார்.ஹார்வர்ட் டிஎச் சான் பொது சுகாதாரப் பள்ளியின் ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர் டாக்டர் வால்டர் வில்லெட் உள்ளிட்ட பலர், இந்த ஆய்வின் முடிவுகள் வலுவானவை அல்ல எனக் கூறுகின்றனர்.அவர்களின் முக்கிய காரணங்களாக,25 ஆண்டுகளில் உணவு மாறியிருக்க வாய்ப்பு அதிகம்,பல உணவுகள் ஆய்வு செய்யப்பட்டதால், சீஸ் தொடர்பான முடிவு தற்செயலாக இருக்கலாம் என்கின்றனர்.தைபே மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் தியான்-ஷின் யே,“சீஸ் நேரடியாக நரம்புகளை பாதுகாக்கிறது என்பதற்குப் பதிலாக, சிவப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விட இது குறைவான தீங்கு விளைவிக்கும் தேர்வாக இருக்கலாம்,”என குறிப்பிட்டுள்ளார்.அதாவது, சீஸ் சாப்பிட்டதால் அல்ல, சீஸ் மாற்றிய உணவுகள் காரணமாக அபாயம் குறைந்திருக்கலாம்.இந்த ஆய்வில்,குறைந்த கொழுப்புள்ள பால், தயிர், மோர், போன்றவற்றுக்கு டிமென்ஷியாவுக்கு எதிரான எந்தப் பாதுகாப்பும் இல்லை மேலும், அவற்றை அதிகம் எடுத்தவர்களுக்கு நீரிழிவு ,கொலஸ்ட்ரால் கோளாறு,இதய நோய் அதிகமாக இருந்ததாக, தடுப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் டேவிட் காட்ஸ் தெரிவித்தார்.நரம்பியல் நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் ஐசக்சன் கூறுகையில்:ஸ்வீடனில் உள்ள பசுக்கள் பெரும்பாலும்புல் மேய்வதால், பால் மற்றும் சீஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கலாம்.இவை மூளைக்கு நல்லவை என நம்பப்பட்டாலும், அல்சைமர் அபாய மரபணு உள்ளவர்களில் எதிர்பார்த்த பலன் தெளிவாக இல்லை.இந்த முடிவுகள் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நேரடியாக பொருந்தாது என சோனெஸ்டெட் ஏற்றுக்கொண்டார்.“ஸ்வீடனில் அதிகம் உண்ணப்படுவது கடினமான, புளிக்க வைக்கப்பட்ட சீஸ் அமெரிக்காவில் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட சீஸ்,” என்று அவர் கூறினார்.அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் டிமென்ஷியாவைத் தடுக்கின்றன என்று உறுதியாகக் கூற முடியாது.அதிக கொழுப்பு உணவுகளை அதிகரிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கவில்லைமூளை ஆரோக்கியத்திற்கு இன்னும் நம்பகமான வழி காய்கறிகள்,பழங்கள்,முழுதானியங்கள்,மீன், பருப்பு, நல்ல எண்ணெய்கள் மத்தியதர (Mediterranean) உணவுமுறை தான் இன்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பான தேர்வாக உள்ளது.