• May 16 2026

தனுஷின் 'கர' திரைப்படத்தின் புதிய அப்டேட் தெரியுமா?

Ziya / Mar 24th 2026, 5:23 pm
image

'கர' திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


போர் தொழில் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.


இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். 


மேலும், கே. எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகும் இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.


இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இதனால், படக்குழு தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.


இந்நிலையில், ‘கர’ படத்தில் மமிதா பைஜு நடித்துள்ள கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 


அதில் அவர் “செல்லி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

தனுஷின் 'கர' திரைப்படத்தின் புதிய அப்டேட் தெரியுமா 'கர' திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் தொழில் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்த படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். மேலும், கே. எஸ். ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகும் இந்த படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.இதனால், படக்குழு தொடர்ந்து அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.இந்நிலையில், ‘கர’ படத்தில் மமிதா பைஜு நடித்துள்ள கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் “செல்லி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

Advertisement

Advertisement

Advertisement