• Feb 27 2026

புலிகளை அழித்தவரை அரசு வேட்டையாடுவதா? - சுரேஷ் சலே கைதுக்கு உதய கம்மன்பில கடும் எதிர்ப்பு

Chithra / Feb 26th 2026, 7:58 am
image

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சாட்டினார்.


இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-


"விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது சுரேஷ் சலே நாட்டுக்காகப் பாரிய பங்களிப்பை வழங்கிய ஓர் அதிகாரி ஆவார். அத்தகைய ஒருவரைப் பழிவாங்கும் நோக்கம் பிரிவினைவாத சக்திகளுக்கு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. தற்போது நடைபெற்றுள்ள இந்தக் கைது நடவடிக்கையின் பின்னணியில் அத்தகைய சக்திகளின் தூண்டுதல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.


உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தத் தாக்குதலுடன் தொடர்பில்லாத அப்பாவிகளைத் திட்டமிட்ட அடிப்படையில் இலக்கு வைத்துத் தண்டிப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இத்தகைய அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் முன்னின்று குரல் கொடுப்போம்." - என்றார்.

புலிகளை அழித்தவரை அரசு வேட்டையாடுவதா - சுரேஷ் சலே கைதுக்கு உதய கம்மன்பில கடும் எதிர்ப்பு அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சாட்டினார்.இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-"விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது சுரேஷ் சலே நாட்டுக்காகப் பாரிய பங்களிப்பை வழங்கிய ஓர் அதிகாரி ஆவார். அத்தகைய ஒருவரைப் பழிவாங்கும் நோக்கம் பிரிவினைவாத சக்திகளுக்கு நீண்டகாலமாகவே இருந்து வருகின்றது. தற்போது நடைபெற்றுள்ள இந்தக் கைது நடவடிக்கையின் பின்னணியில் அத்தகைய சக்திகளின் தூண்டுதல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்தத் தாக்குதலுடன் தொடர்பில்லாத அப்பாவிகளைத் திட்டமிட்ட அடிப்படையில் இலக்கு வைத்துத் தண்டிப்பதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இத்தகைய அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக நாம் முன்னின்று குரல் கொடுப்போம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement