• Nov 28 2024

நோயாளர்களை பார்வையிட நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா விடுதிக்கு வருவதில்லையா? பணிப்பாளர் என்ன சொல்கிறார்?

Chithra / Sep 26th 2024, 2:55 pm
image


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும்  நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ்  கடந்த ஆறு நாட்கள் தொடர்ச்சியாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்

இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகிய இருவர் கடமையில் உள்ளார்கள்.

இதில் வைத்திய நிபுணர் அஜந்தா   வைத்தியசாலை விடுதிக்கு சீராகச் சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைத்திய நிபுணர் அஜந்தா  கடந்த புதன்கிழமை (18.09.2024) அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரத்தில் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளார். 

அதற்கு பின்னர் 23 ஆம் திகதி வரை வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளை பார்வையிடவில்லை என நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர் 

குறித்த வைத்திய நிபுணரின் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் நோயாளிகள் நோயின் வீரியத்தால் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

குறித்த வைத்திய நிபுணர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார். ஆகையால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிய வேண்டிய நேரத்தில் தனது தனியார் மருத்துவமனையில் சேவை புரிகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறித்த வைத்திய நிபுணர் தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தினை பெறுகின்ற அரச அதிகாரிகள் இவ்வாறு தமது சேவையை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விடயங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தெரிந்து நடக்கின்றனவா? அல்லது தெரியாமல் நடக்கின்றனவா? என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியை எமது செய்திப்பிரிவு தொடர்புகொண்டு கோட்டபோது, 

வைத்தியர்களுக்கு ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய நாட்களில் கடமைக்கு வரவேண்டும். அதை விடுத்து கடமைக்கு வரவில்லை என்றால் அவர்கள் சுயமாக விடுமுறை எடுத்து நிற்கவேண்டும். மேற்குறித்த விடயம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறித்த வைத்தியார் தொடர்பாக தனக்கு முறைப்பாடுகள் எவையும் வரவில்லை என்று முறைப்பாடு தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நோயாளர்களை பார்வையிட நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா விடுதிக்கு வருவதில்லையா பணிப்பாளர் என்ன சொல்கிறார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும்  நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ்  கடந்த ஆறு நாட்கள் தொடர்ச்சியாக விடுதிக்கு வருகை தராமையினால் நோயாளிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்இந்த விடயம் குறித்து மேலும் தெரிய வருகையில்,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் திருமதி. கவிதா மற்றும் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜ் ஆகிய இருவர் கடமையில் உள்ளார்கள்.இதில் வைத்திய நிபுணர் அஜந்தா   வைத்தியசாலை விடுதிக்கு சீராகச் சென்று நேயாளர்களை பார்வையிடுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.வைத்திய நிபுணர் அஜந்தா  கடந்த புதன்கிழமை (18.09.2024) அன்று இறுதியாக வைத்தியசாலை விடுதிக்கு வந்து, மிகவும் குறுகிய நேரத்தில் நோயாளிகளை பார்வையிட்டு சென்றுள்ளார். அதற்கு பின்னர் 23 ஆம் திகதி வரை வைத்தியசாலை விடுதிக்கு வந்து நோயாளிகளை பார்வையிடவில்லை என நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர் குறித்த வைத்திய நிபுணரின் கண்காணிப்பின் கீழ் உள்ள நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆகையால் நோயாளிகள் நோயின் வீரியத்தால் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.குறித்த வைத்திய நிபுணர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றின் இயக்குனராக கடமையாற்றி வருகின்றார். ஆகையால் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரிய வேண்டிய நேரத்தில் தனது தனியார் மருத்துவமனையில் சேவை புரிகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.குறித்த வைத்திய நிபுணர் தமது தனியார் வைத்தியசாலைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு கட்டணம் அறவிட்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி அங்கு வைத்து சிகிச்சை வழங்குவதாகவும், அவர்களுக்கு சிறப்பு கண்காணிப்பு வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மக்களது வரிப்பணத்தில் சம்பளத்தினை பெறுகின்ற அரச அதிகாரிகள் இவ்வாறு தமது சேவையை துஷ்பிரயோகம் செய்வது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விடயம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விடயங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்திக்கு தெரிந்து நடக்கின்றனவா அல்லது தெரியாமல் நடக்கின்றனவா என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.இது தொடர்பாக பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தியை எமது செய்திப்பிரிவு தொடர்புகொண்டு கோட்டபோது, வைத்தியர்களுக்கு ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய நாட்களில் கடமைக்கு வரவேண்டும். அதை விடுத்து கடமைக்கு வரவில்லை என்றால் அவர்கள் சுயமாக விடுமுறை எடுத்து நிற்கவேண்டும். மேற்குறித்த விடயம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் குறித்த வைத்தியார் தொடர்பாக தனக்கு முறைப்பாடுகள் எவையும் வரவில்லை என்று முறைப்பாடு தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement