கிண்ணியா பெரியாற்றுமுனை கடலில் டொல்பின் வகை மீன் கரை ஒதுங்கிய நிலையில் அதை கடலுக்குள் விடுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
கடந்த சில நாள்களாக பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட காலநிலைமாற்றத்தால் டொல்பின் மீன் கரைக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையொதுங்கிய டொல்பின் மீனை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கு அப்பிரதேச மக்கள் முயற்சித்து வருகின்றனர்.
டொல்பின் மீன் கரையொதுங்குவது அரிதிலும் அரிதான ஒரு விடயமாகும். டொல்பின் கடலுக்குள் இருந்து கரையொதுங்குவதைப் பார்க்க பலரும் விரும்புவது வழக்கம்.
குறிப்பாக சிறுவர்கள் டொல்பின் மீனைப் பார்க்க அதிகளவில் விரும்புவர். ஏனெனில் டொல்பின் நீருக்குள் அழகாக துள்ளிப் பாய்ந்து விளையாடும். இந்தக் காட்சியைப் பார்க்கவே சிறுவர்கள் உள்ளிட்டோர் விரும்புவர்.
இவ்வாறானதொரு நிலையில் இன்று கிண்ணியா பெரியாற்றுமுனை கடற்கரையில் டொல்பின் வகை மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
கரையொதுங்கிய டொல்பின் மீனைப் பிடித்த இளைஞர்கள், அதை மீண்டும் கடலுக்குள் விட முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிண்ணியா கடற்கரையில் கரை ஒதுங்கிய டொல்பின்; கடலுக்குள் விடுவதற்கு முயற்சிக்கும் மக்கள் கிண்ணியா பெரியாற்றுமுனை கடலில் டொல்பின் வகை மீன் கரை ஒதுங்கிய நிலையில் அதை கடலுக்குள் விடுவதற்கு முயற்சித்து வருகின்றனர். கடந்த சில நாள்களாக பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு உள்ளிட்ட காலநிலைமாற்றத்தால் டொல்பின் மீன் கரைக்கு வந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையொதுங்கிய டொல்பின் மீனை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கு அப்பிரதேச மக்கள் முயற்சித்து வருகின்றனர். டொல்பின் மீன் கரையொதுங்குவது அரிதிலும் அரிதான ஒரு விடயமாகும். டொல்பின் கடலுக்குள் இருந்து கரையொதுங்குவதைப் பார்க்க பலரும் விரும்புவது வழக்கம். குறிப்பாக சிறுவர்கள் டொல்பின் மீனைப் பார்க்க அதிகளவில் விரும்புவர். ஏனெனில் டொல்பின் நீருக்குள் அழகாக துள்ளிப் பாய்ந்து விளையாடும். இந்தக் காட்சியைப் பார்க்கவே சிறுவர்கள் உள்ளிட்டோர் விரும்புவர்.இவ்வாறானதொரு நிலையில் இன்று கிண்ணியா பெரியாற்றுமுனை கடற்கரையில் டொல்பின் வகை மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய டொல்பின் மீனைப் பிடித்த இளைஞர்கள், அதை மீண்டும் கடலுக்குள் விட முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.