• Oct 17 2024

கடலுக்கு நாளையதினம் வரை செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / Oct 16th 2024, 9:38 am
image

Advertisement

 

மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களுக்கு நாளைய தினம் வரை செல்ல வேண்டாம் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

காலி முதல் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

ஏனைய பகுதிகளில் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

சிலாபம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 முதல் 3 மீற்றர் வரை மேலெழக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேலும்  வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்,

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   

கடலுக்கு நாளையதினம் வரை செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை  மட்டக்களப்பு முதல் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களுக்கு நாளைய தினம் வரை செல்ல வேண்டாம் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.காலி முதல் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்துக்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.ஏனைய பகுதிகளில் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.சிலாபம் முதல் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 முதல் 3 மீற்றர் வரை மேலெழக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.மேலும்  வடமாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்,சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.   

Advertisement

Advertisement

Advertisement