• Nov 23 2024

வெளிநாட்டு வேலைக்காக பணம் வழங்க வேண்டாம்! மக்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

Chithra / Dec 20th 2023, 11:29 am
image

இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரித்துள்ளார்.

அத்துடன் மோசடியான முறையில் பணம் பெறுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் செயலாளர்கள் போல் பாவனை செய்து இஸ்ரேலில் தொழில் வழங்குவதாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மோசடியான முறையில் பணம் பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் 

இஸ்ரேலிய விவசாய வேலை வாய்ப்புகள் அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால், அந்த வேலைகளுக்காக இடைத்தரகர்களிடம் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும், அவ்வாறு பணம் பெறுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், அது குறித்து தெரிவிக்குமாறும் அமைச்சர் மனுஷ நாணயக்கார கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற இலங்கையர்களில் முதல் குழுவாக 80 இளைஞர்கள் இன்று இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைக்காக பணம் வழங்க வேண்டாம் மக்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை இஸ்ரேலிய வேலை வாய்ப்புகள் அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால் இடைத்தரகர்களிடம் பணம் செலுத்த வேண்டாம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார எச்சரித்துள்ளார்.அத்துடன் மோசடியான முறையில் பணம் பெறுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.இலங்கையில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் செயலாளர்கள் போல் பாவனை செய்து இஸ்ரேலில் தொழில் வழங்குவதாக பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மோசடியான முறையில் பணம் பெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் இஸ்ரேலிய விவசாய வேலை வாய்ப்புகள் அரசாங்கத்திடம் இருந்து மட்டுமே கிடைப்பதால், அந்த வேலைகளுக்காக இடைத்தரகர்களிடம் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும், அவ்வாறு பணம் பெறுபவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், அது குறித்து தெரிவிக்குமாறும் அமைச்சர் மனுஷ நாணயக்கார கேட்டுக்கொண்டுள்ளார்.இந்நிலையில், இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற இலங்கையர்களில் முதல் குழுவாக 80 இளைஞர்கள் இன்று இஸ்ரேலுக்குப் புறப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement