• Nov 22 2024

முட்டாள்தனமான கதைக்க வேண்டாம் - சபையில் கர்ச்சித்த நீதி அமைச்சர் விஜயதாச..!

Chithra / Feb 8th 2024, 2:06 pm
image


பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில்  நீதிமன்றங்கள் தலையிட முடியாது  எனத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முட்டாள் தனமாக கதைக்காமல் சட்டத்திற்குட்பட்டு கதையுங்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் . 

இன்றைய  பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

சபாநாயகர் அவர்களே உங்களிடம் சட்டம் படிக்க  வேண்டிய தேவையில்லை.  இந்தப் பாராளுமன்றத்தில் சட்ட மூலம் தொடர்பாக நீதிமன்றம் கட்டளை வழங்கியதும் அந்த விடயத்திற்கு அப்பாற்பட்டு சில திருத்தங்களை கொண்டுவரமுடியாது. அந்த விடயப்பரப்புக்குள் திருத்தங்களை கொண்டுவரலாம். 

அதற்கமைய இந்த சட்ட மூலம்,   திருத்தங்களுடன் நிறைவேற்றியதும் இது தொடார்பாக  கேள்வி கேட்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கும் உரிமையில்லை.   

மிகத்தெளிவாக நாங்கள் சொல்லியிருக்கின்றோம், இந்த சட்டமூலம் தொடர்பாக இருக்கக்கூடிய விமர்சனங்களுடன் தேவையான தரப்பினருடன் கலந்துரையாடி இந்த சட்டமூலத்தில்  குறைபாடுகள் இருக்குமெனில் திருத்துவதற்கு உடன்பட்டிருக்கின்றோம் 

ஆகவே அதனூடாக  திருத்தங்களை முன்வைத்து நிறைவேற்றலாம். பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில்  நீதிமன்றங்கள் தலையிட முடியாது. 

கடந்தவருடம் இந்த நிகழ் நிலையினூடாக  பாதிக்கப்படடவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், உயிரிழந்தவர்கள் இருக்கிறார்கள், குடும்பங்கள் பாதிக்கப்பட்டவர்கள்  இருக்கிறார்கள், குற்றத்தடுப்பு பிரிவுக்கு பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகள் இருக்கின்றன. 

சட்டத்திற்கு அப்பால் நின்று உயிரற்றவர்களுக்கு உயிர்கொடுக்க பலர் இருக்கிறார்கள் இவ்வாறு முட்டாள்தனமான கதைகளை சொல்லவேண்டாம், சட்டத்திற்கு உட்பட்டு பேசுங்கள் என மேலும் தெரிவித்தார்.

முட்டாள்தனமான கதைக்க வேண்டாம் - சபையில் கர்ச்சித்த நீதி அமைச்சர் விஜயதாச. பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில்  நீதிமன்றங்கள் தலையிட முடியாது  எனத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முட்டாள் தனமாக கதைக்காமல் சட்டத்திற்குட்பட்டு கதையுங்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார் . இன்றைய  பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சபாநாயகர் அவர்களே உங்களிடம் சட்டம் படிக்க  வேண்டிய தேவையில்லை.  இந்தப் பாராளுமன்றத்தில் சட்ட மூலம் தொடர்பாக நீதிமன்றம் கட்டளை வழங்கியதும் அந்த விடயத்திற்கு அப்பாற்பட்டு சில திருத்தங்களை கொண்டுவரமுடியாது. அந்த விடயப்பரப்புக்குள் திருத்தங்களை கொண்டுவரலாம். அதற்கமைய இந்த சட்ட மூலம்,   திருத்தங்களுடன் நிறைவேற்றியதும் இது தொடார்பாக  கேள்வி கேட்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கும் உரிமையில்லை.   மிகத்தெளிவாக நாங்கள் சொல்லியிருக்கின்றோம், இந்த சட்டமூலம் தொடர்பாக இருக்கக்கூடிய விமர்சனங்களுடன் தேவையான தரப்பினருடன் கலந்துரையாடி இந்த சட்டமூலத்தில்  குறைபாடுகள் இருக்குமெனில் திருத்துவதற்கு உடன்பட்டிருக்கின்றோம் ஆகவே அதனூடாக  திருத்தங்களை முன்வைத்து நிறைவேற்றலாம். பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில்  நீதிமன்றங்கள் தலையிட முடியாது. கடந்தவருடம் இந்த நிகழ் நிலையினூடாக  பாதிக்கப்படடவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், உயிரிழந்தவர்கள் இருக்கிறார்கள், குடும்பங்கள் பாதிக்கப்பட்டவர்கள்  இருக்கிறார்கள், குற்றத்தடுப்பு பிரிவுக்கு பல்லாயிரக்கணக்கான முறைப்பாடுகள் இருக்கின்றன. சட்டத்திற்கு அப்பால் நின்று உயிரற்றவர்களுக்கு உயிர்கொடுக்க பலர் இருக்கிறார்கள் இவ்வாறு முட்டாள்தனமான கதைகளை சொல்லவேண்டாம், சட்டத்திற்கு உட்பட்டு பேசுங்கள் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement