கேரளா பத்தனம்திட்டாவில் இந்திய குடியரசுத் தலைவர் முர்மு பயணித்த ஹெலிகொப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் சிக்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
இன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள தற்காலிக ஹெலிபேட்டில் அவரது ஹெலிகொப்டர் தரையிறங்கியது.
ஆனால், விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட திடீர் சம்பவம், அங்கு இருந்த அனைவரையும் பரபரப்படையச் செய்தது.
ஹெலிகாப்டர் தரையிறங்கிய தற்காலிக ஹெலிபேட், கான்கிரீட் கலவை பயன்படுத்தி அவசரமாக அமைக்கப்பட்டது. தரையிறங்கும் போது, ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்டது.
இதனால், ஹெலிகாப்டர் முழுவதும் சற்று சாய்ந்து, தலைவர் முர்மு உள்ளிட்ட பயணிகள் பாதுகாப்பாக இறங்க முடியாமல் தவித்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு இருந்த பொலிஸ்பிரிவு மற்றும் கோவில் ஊழியர்கள் உடனடியாக மீட்க செயல்பட்டனர். ஆனால் சிக்கல் சரியாகவில்லை. அதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர்.
பத்தனம்திட்டாவிலிருந்து வந்த தீயணைப்பு படை, ஹெலிகொப்டரை சிறிது தூரம் தள்ளி, சக்கரத்தை விடுவித்தது.
கிட்டத்தட்ட சுமார் 10 நிமிடங்கள் நீடித்த முயற்சியின் பின் தலைவர் முர்மு மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் விரைந்த செயலால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமான நிலையம் மற்றும் கோவில் நிர்வாகம், ஹெலிபேட்டின் தரைத் தளத்தை சரிபார்த்து, பின்னர் தலைவரின் சபரிமலை தரிசனத்தை அனுமதித்தது.
மேலும், சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை, ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
திரௌபதி முர்மு பயணித்த ஹெலிகொப்டர் தளத்தில் சிக்கியது; தீயணைப்பு வீரர்களின் நீண்ட முயற்சியின் பின்னர் மீட்பு கேரளா பத்தனம்திட்டாவில் இந்திய குடியரசுத் தலைவர் முர்மு பயணித்த ஹெலிகொப்டரின் டயர் கான்கிரீட் தளத்தில் சிக்கியுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தரிசனம் செய்ய கேரளாவுக்கு பயணம் மேற்கொண்டார். இன்று பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள தற்காலிக ஹெலிபேட்டில் அவரது ஹெலிகொப்டர் தரையிறங்கியது. ஆனால், விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட திடீர் சம்பவம், அங்கு இருந்த அனைவரையும் பரபரப்படையச் செய்தது.ஹெலிகாப்டர் தரையிறங்கிய தற்காலிக ஹெலிபேட், கான்கிரீட் கலவை பயன்படுத்தி அவசரமாக அமைக்கப்பட்டது. தரையிறங்கும் போது, ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால், ஹெலிகாப்டர் முழுவதும் சற்று சாய்ந்து, தலைவர் முர்மு உள்ளிட்ட பயணிகள் பாதுகாப்பாக இறங்க முடியாமல் தவித்தனர்.அதனைத்தொடர்ந்து அங்கு இருந்த பொலிஸ்பிரிவு மற்றும் கோவில் ஊழியர்கள் உடனடியாக மீட்க செயல்பட்டனர். ஆனால் சிக்கல் சரியாகவில்லை. அதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர். பத்தனம்திட்டாவிலிருந்து வந்த தீயணைப்பு படை, ஹெலிகொப்டரை சிறிது தூரம் தள்ளி, சக்கரத்தை விடுவித்தது. கிட்டத்தட்ட சுமார் 10 நிமிடங்கள் நீடித்த முயற்சியின் பின் தலைவர் முர்மு மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.தீயணைப்பு வீரர்களின் விரைந்த செயலால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமான நிலையம் மற்றும் கோவில் நிர்வாகம், ஹெலிபேட்டின் தரைத் தளத்தை சரிபார்த்து, பின்னர் தலைவரின் சபரிமலை தரிசனத்தை அனுமதித்தது. மேலும், சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடவில்லை, ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருந்ததாக தெரிவித்துள்ளது.