• Sep 13 2026

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி வைப்பு

Aathira / Sep 12th 2026, 12:59 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் World Vision நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன், பிரதேச செயலகத்தின் தெரிவின் அடிப்படையில் 77 குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, தூண்டாய் – உப்புமாவெளி கிராம சேவையாளர் பிரிவில் 33 குடும்பங்களுக்கும், கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவில் 44 குடும்பங்களுக்கும் நேற்று (11) குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.

இதன்போது, முல்லைத்தீவு சுகாதாரப் பணியாளர்களால் குடிநீரை பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் நீர்ப் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

நிகழ்வில் World Vision நிறுவன அலுவலர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி வைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் World Vision நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன், பிரதேச செயலகத்தின் தெரிவின் அடிப்படையில் 77 குடும்பங்களுக்கு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, தூண்டாய் – உப்புமாவெளி கிராம சேவையாளர் பிரிவில் 33 குடும்பங்களுக்கும், கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவில் 44 குடும்பங்களுக்கும் நேற்று (11) குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன.இதன்போது, முல்லைத்தீவு சுகாதாரப் பணியாளர்களால் குடிநீரை பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் நீர்ப் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.நிகழ்வில் World Vision நிறுவன அலுவலர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர், பொது சுகாதாரப் பரிசோதகர்கள், கிராம அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement