• Nov 19 2024

நிதி கொண்டு சென்ற வாகனத்தைக் கடத்தி கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட சாரதி!

Chithra / Nov 19th 2024, 8:55 am
image

 

மினுவாங்கொடையில் பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதியாக செயற்பட்ட ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.  

மினுவாங்கொடை நகரில் வைத்து நிதி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர். 

இதனையடுத்து, அவர் பணத்துடன் வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளார். 

இதன்பின்னர், குறித்த வாகனம் கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், தப்பிச் சென்றவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. 

இதற்கமைய, அவரின் புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் தகவல் வழங்குவதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

இதன்படி, சந்தேகநபர் தொடர்பான தகவல்களை 071 85 91 608 அல்லது 071 85 91 610 ஆகிய இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என பொலிஸ்  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


நிதி கொண்டு சென்ற வாகனத்தைக் கடத்தி கோடிக்கணக்கில் கொள்ளையிட்ட சாரதி  மினுவாங்கொடையில் பணத்தைப் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதியாக செயற்பட்ட ஒருவர் ஏழரை கோடி ரூபாவை கொள்ளைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.  மினுவாங்கொடை நகரில் வைத்து நிதி கொண்டு செல்லப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாகனத்தை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து, அவர் பணத்துடன் வாகனத்தைக் கடத்திச் சென்றுள்ளார். இதன்பின்னர், குறித்த வாகனம் கம்பஹா – உக்கல்பொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தப்பிச் சென்றவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. இதற்கமைய, அவரின் புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கட்டுள்ளது.அத்துடன் இது தொடர்பில் தகவல் வழங்குவதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, சந்தேகநபர் தொடர்பான தகவல்களை 071 85 91 608 அல்லது 071 85 91 610 ஆகிய இலக்கங்களுக்கு அறியப்படுத்த முடியும் என பொலிஸ்  ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement