நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பௌவுசர் வாகனங்களை ஈடுபடுத்தியதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
குறைந்த நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொடர்ச்சியாக சுத்தமான குடிநீர் வழங்குவதே தங்களின் முதன்மையான பொறுப்பு என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகத்தில் ஏதேனும் தடை அல்லது சிக்கல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக '1939' என்ற துரித இலக்கத்தில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இந்த தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வழங்கல் சபை உறுதியளித்துள்ளது.
தொடரும் வறட்சியான காலநிலையில் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு - களமிறங்கிய பௌவுசர் வாகனங்கள் நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பௌவுசர் வாகனங்களை ஈடுபடுத்தியதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.குறைந்த நீர் விநியோகம் உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு தொடர்ச்சியாக சுத்தமான குடிநீர் வழங்குவதே தங்களின் முதன்மையான பொறுப்பு என நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.நீர் விநியோகத்தில் ஏதேனும் தடை அல்லது சிக்கல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக '1939' என்ற துரித இலக்கத்தில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்த தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர் வழங்கல் சபை உறுதியளித்துள்ளது.தொடரும் வறட்சியான காலநிலையில் பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.