• May 14 2026

தெல்லிப்பளையில் போதைப்பொருள் வழக்கு… குற்றவாளிக்கு கடூழிய சிறை

Aathira / May 13th 2026, 3:03 pm
image

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு 1.44 கிராம் கெரோயின் போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா இன்று (13.05.2026) வழங்கினார்.

அத்துடன் குற்றவாளிக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 12 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்டகாலமாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

இவ்வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி கா. நசிகேதன் முன்னிலையாகி வழக்கை நடத்தியிருந்தார்.


தெல்லிப்பளையில் போதைப்பொருள் வழக்கு… குற்றவாளிக்கு கடூழிய சிறை யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு 1.44 கிராம் கெரோயின் போதைப்பொருளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கின் தீர்ப்பை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா இன்று (13.05.2026) வழங்கினார்.அத்துடன் குற்றவாளிக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால், மேலும் 12 மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்டகாலமாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.இவ்வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டவாதி கா. நசிகேதன் முன்னிலையாகி வழக்கை நடத்தியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement