• May 13 2024

வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் விநியோகம்..! - கஜேந்திரகுமார் எம்.பி அதிர்ச்சித் தகவல்

Chithra / Dec 5th 2023, 8:24 am
image

Advertisement

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன,  இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆயுத போராட்டத்தையும் போராடுகின்ற மக்களையும் தோற்கடிகும் மனநிலையில் தான்  இந்த அரசும் இராணுவமும் இருக்கின்றன.

இதன் ஒரு கட்டமாக வடக்கு, கிழக்கில் இளைஞர்களை போதைப்பொருளுக்கும் மதுபானங்களுக்கும் அடிமையாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இராணுவத்திற்கு தெரியாமல் வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது  சாத்தியமில்லை. எனவே இதற்கு  இராணுவத்தின் பங்களிப்பும் உள்ளது.

எனவே போதைப்பொருள் தொடர்பில் உளவள ஆலோசனைகள்   முக்கியமாகத் தேவைப்படுகின்றன. ஏனெனில் இவ்வாறான போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்தாது விட்டால் அது வேறு மாதிரியான பிரச்சினைகளை கொண்டு வந்து விடும்.

பாடசாலைகளில் உளவள ஆலோசனை திட்டம் இருந்தாலும். அது   சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதற்கு தேவையான ஒதுக்கீடுகள் இல்லை.  

அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கில் 60000 க்கும் மேற்பட்ட விதவைகள் பெண்கள் உள்ளார்கள். இம்மாகாணங்களே யுத்தத்தில் மோசமாக பாதிக்கப்பட்டன.

அழிவை சந்தித்தன. இங்கு வீடமைப்பு என்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு காணிகள் இருந்தாலும் வீடுகள் இல்லை.இதற்கு இந்திய வீடமைப்புத்திட்டம் ஓரளவுக்கு உதவினாலும் இலங்கை அரசின் வீடமைப்புக்கான நிதி உதவித்திட்டம் வெற்றியளிக்கவில்லை.

வீடமைப்புக்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டதால் வீடுகளை நிர்மாணிக்க முடியவில்லை. இதனை பயன்படுத்தி நுண்நிதி கடன்  கம்பனிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்துள்ளன.  அந்த மக்களின் வறுமையை பயன்படுத்தின.

பணத்தேவைக்காக மக்கள் குறிப்பாக பெண்கள் இந்த நுண்நிதி கடன்  கம்பனிகளின் பொறியில் சிக்கினர். பலர் தற்கொலையும் செய்தனர்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தாக்குதலில் அழிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கியிருந்தால் அந்த மக்கள் அதன் மூலம் வீடுகளை நிர்மாணித்திருப்பார்கள்.

எனவே நுண் நிதி கடன் கம்பெனிகளின் பொறியிலிருந்து  வடக்கு,கிழக்கு மக்களை பாதுகாக்க வேண்டும் ஆகவே இவ்வாறான நிலைமையை  தொடர விட முடியாது.

விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க  ஒரு பெண் என்ற அடிப்படியில் இதில் தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் விநியோகம். - கஜேந்திரகுமார் எம்.பி அதிர்ச்சித் தகவல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இளைஞர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்படுகின்றன,  இராணுவத்தின் பங்களிப்புடன் போதைப்பொருள் அமுல்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,ஆயுத போராட்டத்தையும் போராடுகின்ற மக்களையும் தோற்கடிகும் மனநிலையில் தான்  இந்த அரசும் இராணுவமும் இருக்கின்றன.இதன் ஒரு கட்டமாக வடக்கு, கிழக்கில் இளைஞர்களை போதைப்பொருளுக்கும் மதுபானங்களுக்கும் அடிமையாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.இராணுவத்திற்கு தெரியாமல் வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது  சாத்தியமில்லை. எனவே இதற்கு  இராணுவத்தின் பங்களிப்பும் உள்ளது.எனவே போதைப்பொருள் தொடர்பில் உளவள ஆலோசனைகள்   முக்கியமாகத் தேவைப்படுகின்றன. ஏனெனில் இவ்வாறான போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்தாது விட்டால் அது வேறு மாதிரியான பிரச்சினைகளை கொண்டு வந்து விடும்.பாடசாலைகளில் உளவள ஆலோசனை திட்டம் இருந்தாலும். அது   சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அதற்கு தேவையான ஒதுக்கீடுகள் இல்லை.  அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கில் 60000 க்கும் மேற்பட்ட விதவைகள் பெண்கள் உள்ளார்கள். இம்மாகாணங்களே யுத்தத்தில் மோசமாக பாதிக்கப்பட்டன.அழிவை சந்தித்தன. இங்கு வீடமைப்பு என்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மக்களுக்கு காணிகள் இருந்தாலும் வீடுகள் இல்லை.இதற்கு இந்திய வீடமைப்புத்திட்டம் ஓரளவுக்கு உதவினாலும் இலங்கை அரசின் வீடமைப்புக்கான நிதி உதவித்திட்டம் வெற்றியளிக்கவில்லை.வீடமைப்புக்கான நிதி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டதால் வீடுகளை நிர்மாணிக்க முடியவில்லை. இதனை பயன்படுத்தி நுண்நிதி கடன்  கம்பனிகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை ஆக்கிரமித்துள்ளன.  அந்த மக்களின் வறுமையை பயன்படுத்தின.பணத்தேவைக்காக மக்கள் குறிப்பாக பெண்கள் இந்த நுண்நிதி கடன்  கம்பனிகளின் பொறியில் சிக்கினர். பலர் தற்கொலையும் செய்தனர்.வடக்கு கிழக்கில் இராணுவத்தாக்குதலில் அழிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்கியிருந்தால் அந்த மக்கள் அதன் மூலம் வீடுகளை நிர்மாணித்திருப்பார்கள்.எனவே நுண் நிதி கடன் கம்பெனிகளின் பொறியிலிருந்து  வடக்கு,கிழக்கு மக்களை பாதுகாக்க வேண்டும் ஆகவே இவ்வாறான நிலைமையை  தொடர விட முடியாது.விடயத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க  ஒரு பெண் என்ற அடிப்படியில் இதில் தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement