• Apr 15 2026

நாடெங்கும் போதைப்பொருள் வேட்டை; 24 மணித்தியாலங்களில் 520 பேர் கைது

Chithra / Apr 14th 2026, 7:40 pm
image

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலங்களில் 520 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சந்தேக நபர்களிடமிருந்து 179 கிராம் ஹெரோயின் 228 கிராம் ஐஸ் (ICE) போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்டவர்களில் சிலரது சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

நாடெங்கும் போதைப்பொருள் வேட்டை; 24 மணித்தியாலங்களில் 520 பேர் கைது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலங்களில் 520 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் 6 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்களிடமிருந்து 179 கிராம் ஹெரோயின் 228 கிராம் ஐஸ் (ICE) போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டவர்களில் சிலரது சட்டவிரோத சொத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement