• Jul 04 2024

மதுபோதையில் வெறியாட்டம்; ரயிலை இடைநடுவில் நிறுத்திவிட்டு தப்பியோடிய சாரதி! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Chithra / Jul 2nd 2024, 9:51 am
image

Advertisement


மதுபோதையில் ரயிலை செலுத்திய சாரதி இடை நடுவில் அதனை கைவிட்டு ஓடிய சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு ஓடிய சாரதி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் (30) கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் சாரதியின் தவறான நடத்தை காரணமாக திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் முற்பகல் 10.40 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி ஓடத் தொடங்கிய ரயிலில் பணியாற்றிய சாரதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பதட்டமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்டி நகருக்கு அருகில் உள்ள சுடுஹும்பொல என்ற இடத்தில் ரயிலை நிறுத்தி விட்டு ரயிலில் இருந்து தப்பி ஓடிய போது,

பயணிகள் அவரை துரத்திச் சென்று பிடித்து, உதவி ஓட்டுநரை ஈடுபடுத்தி ரயில், கண்டி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், மதுபோதையில் ரயிலை  ஓட்டியவரை ரயில் போக்குவரத்து ஆய்வாளர் மூலம் ரயில் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ரயில் மதியம் 1.40 மணிக்கு கண்டியை வந்தடையும். ஆனால் மதியம் 2.30 மணிக்கே வந்ததாக பயணிகள் தெரியவருகின்றது.


மதுபோதையில் வெறியாட்டம்; ரயிலை இடைநடுவில் நிறுத்திவிட்டு தப்பியோடிய சாரதி எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை மதுபோதையில் ரயிலை செலுத்திய சாரதி இடை நடுவில் அதனை கைவிட்டு ஓடிய சம்பவமொன்று கண்டியில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு ஓடிய சாரதி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.நேற்று முன்தினம் (30) கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் சாரதியின் தவறான நடத்தை காரணமாக திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று முன்தினம் முற்பகல் 10.40 மணியளவில் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி ஓடத் தொடங்கிய ரயிலில் பணியாற்றிய சாரதி அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பதட்டமாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.கண்டி நகருக்கு அருகில் உள்ள சுடுஹும்பொல என்ற இடத்தில் ரயிலை நிறுத்தி விட்டு ரயிலில் இருந்து தப்பி ஓடிய போது,பயணிகள் அவரை துரத்திச் சென்று பிடித்து, உதவி ஓட்டுநரை ஈடுபடுத்தி ரயில், கண்டி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பின்னர், மதுபோதையில் ரயிலை  ஓட்டியவரை ரயில் போக்குவரத்து ஆய்வாளர் மூலம் ரயில் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த ரயில் மதியம் 1.40 மணிக்கு கண்டியை வந்தடையும். ஆனால் மதியம் 2.30 மணிக்கே வந்ததாக பயணிகள் தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement