முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் மீண்டும் முதலிடத்தைப் பெற்று தேறாங்கண்டல் கிராம அலுவலர் துஷாந்தி வினோதன் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் வெற்றி பெற்றோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டியில் 2023ஆம் ஆண்டியில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற கிராம அலுவலக பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களையும் பெற்ற கிராம அலுவலர்களுக்கான சான்றிதழ்களும் மெய்ச்சுரைகளும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனால் வழங்கப்பட்டது.
இதில் முதலாம் இடத்தினை துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேறாங்கண்டல் கிராம அலுவலகர் துஷாந்தி வினோதன் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை அதே பிரதேச செயலாளர் பிரிவின் அனிஞ்சியன்குளம் கிராம அலுவலகர் ரீ.றஜனி பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து மூன்றாம் இடத்தினை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் வற்றாப்பளை கிராம அலுவலகர் எஸ்.கரிகாலன் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, பத்து இடங்களை பெற்ற கிராம அலுவலர்களுக்கான மெய்ச்சுரைகளையும் மாவட்ட செயலாளர் வழங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயக்காந் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பிரதேச செயலாளர் பிரிவின் கிராம அலுவலகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
முதலாம் இடத்துக்கு மீண்டும் தெரிவானார் துஷாந்தி வினோதன் முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் மீண்டும் முதலிடத்தைப் பெற்று தேறாங்கண்டல் கிராம அலுவலர் துஷாந்தி வினோதன் சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவப் போட்டியில் வெற்றி பெற்றோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட மட்ட கிராம அலுவலகர்களுக்கான அலுவலக முகாமைத்துவ போட்டியில் 2023ஆம் ஆண்டியில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற கிராம அலுவலக பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டு முதல் மூன்று இடங்களையும் பெற்ற கிராம அலுவலர்களுக்கான சான்றிதழ்களும் மெய்ச்சுரைகளும் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனால் வழங்கப்பட்டது. இதில் முதலாம் இடத்தினை துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தேறாங்கண்டல் கிராம அலுவலகர் துஷாந்தி வினோதன் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாம் இடத்தினை அதே பிரதேச செயலாளர் பிரிவின் அனிஞ்சியன்குளம் கிராம அலுவலகர் ரீ.றஜனி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மூன்றாம் இடத்தினை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் வற்றாப்பளை கிராம அலுவலகர் எஸ்.கரிகாலன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, பத்து இடங்களை பெற்ற கிராம அலுவலர்களுக்கான மெய்ச்சுரைகளையும் மாவட்ட செயலாளர் வழங்கிவைத்தார்.இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.குணபாலன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட செயலாளர் எஸ்.ஜெயக்காந் (காணி), பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பிரதேச செயலாளர் பிரிவின் கிராம அலுவலகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.