• Apr 13 2025

தென்னிலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு- சிக்கிய சந்தேக நபர்..!

Sharmi / Apr 11th 2025, 11:32 am
image

கிரிபத்கொடை காலா சந்தியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச் சம்பவம் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒரு மோட்டார் சைக்கிள் அருகே சந்தேகத்திற்கிடமான நபரை அணுகியபோது சந்தேக நபர் தப்பி ஓட முயன்ற நிலையில் அவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு- சிக்கிய சந்தேக நபர். கிரிபத்கொடை காலா சந்தியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் ஒரு மோட்டார் சைக்கிள் அருகே சந்தேகத்திற்கிடமான நபரை அணுகியபோது சந்தேக நபர் தப்பி ஓட முயன்ற நிலையில் அவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.குறித்த துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சந்தேக நபர் ராகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement