நாட்டின் மத்திய மலைநாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் காலப்பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.
அதிக மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து நீர்த்தேக்கங்கள் நீரால் நிரம்பும்போது, அவற்றின் கீழ் காணப்படும் பாறை அடுக்குகளில் பாரிய அழுத்தம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகப் பாறை அடுக்குகளில் காணப்படும் பிளவுத் தளங்களில் சிறிய அளவிலான அசைவுகள் ஏற்படக்கூடும் எனவும், இத்தகைய அசைவுகளினால் நில அதிர்வுகள் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக மத்திய மலைநாட்டில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நில அதிர்வுகளைக் கண்காணிப்பதற்கான நில அதிர்வு மானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், முன்னர் நாடளாவிய ரீதியில் நான்கு நில அதிர்வு மானிகள் மாத்திரமே காணப்பட்ட நிலையில், தற்போது மத்திய மலைநாடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 13 முதல் 14 வரையான மானிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கிழக்குப் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களே இலங்கைக்குச் சுனாமி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மொரீஷியஸ் பகுதியில் நேற்று (24) ரிக்டர் அளவுகோலில் 6.5 மெக்னிடியூட் அளவில் பதிவான நிலநடுக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த நிலநடுக்கம் இந்திய மற்றும் அவுஸ்திரேலியப் புவித் தட்டுகள் பிரியும் மேற்கு எல்லைப் பகுதியில், இலங்கையிலிருந்து வெகு தொலைவில் ஆழ்கடலில் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கைக்குச் சுனாமி அல்லது வேறு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்தோனேசியா மற்றும் அந்தமான் தீவுகளை அண்மித்த கிழக்குப் பிராந்தியத்தின் ஆழமற்ற கடற்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்திலேயே இலங்கைக்குச் சுனாமி அபாயம் உருவாகக்கூடும் எனவும், ஏனைய பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிலநடுக்க அபாயம் சுனாமி அச்சுறுத்தல் - பேராசிரியர் எச்சரிக்கை நாட்டின் மத்திய மலைநாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் காலப்பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரித்துள்ளார்.அதிக மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து நீர்த்தேக்கங்கள் நீரால் நிரம்பும்போது, அவற்றின் கீழ் காணப்படும் பாறை அடுக்குகளில் பாரிய அழுத்தம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன் காரணமாகப் பாறை அடுக்குகளில் காணப்படும் பிளவுத் தளங்களில் சிறிய அளவிலான அசைவுகள் ஏற்படக்கூடும் எனவும், இத்தகைய அசைவுகளினால் நில அதிர்வுகள் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக மத்திய மலைநாட்டில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் நில அதிர்வுகளைக் கண்காணிப்பதற்கான நில அதிர்வு மானிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், முன்னர் நாடளாவிய ரீதியில் நான்கு நில அதிர்வு மானிகள் மாத்திரமே காணப்பட்ட நிலையில், தற்போது மத்திய மலைநாடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 13 முதல் 14 வரையான மானிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதேவேளை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கிழக்குப் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களே இலங்கைக்குச் சுனாமி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் கொண்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மொரீஷியஸ் பகுதியில் நேற்று (24) ரிக்டர் அளவுகோலில் 6.5 மெக்னிடியூட் அளவில் பதிவான நிலநடுக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த நிலநடுக்கம் இந்திய மற்றும் அவுஸ்திரேலியப் புவித் தட்டுகள் பிரியும் மேற்கு எல்லைப் பகுதியில், இலங்கையிலிருந்து வெகு தொலைவில் ஆழ்கடலில் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இலங்கைக்குச் சுனாமி அல்லது வேறு எந்தவொரு பாதிப்பும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.மேலும், இந்தோனேசியா மற்றும் அந்தமான் தீவுகளை அண்மித்த கிழக்குப் பிராந்தியத்தின் ஆழமற்ற கடற்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்திலேயே இலங்கைக்குச் சுனாமி அபாயம் உருவாகக்கூடும் எனவும், ஏனைய பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் குறைவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.