• Sep 21 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகளுக்கு எதிரான தீர்ப்பு நாளை

Chithra / Sep 21st 2026, 10:55 am
image


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை (22) வழங்கப்படவுள்ளது.


நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


இந்த வழக்கில் அரசுத் தரப்பினால் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளனர். நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் கடந்த மாதம் 24ஆம் திகதி நிறைவடைந்தன.


இதனைத் தொடர்ந்து, வழக்கின் அனைத்து விசாரணைகளையும் ஆராய்ந்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், தீர்ப்பை நாளை (22) வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.


இதனால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த முக்கிய வழக்கின் தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 24 பிரதிவாதிகளுக்கு எதிரான தீர்ப்பு நாளை உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், 24 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நாளை (22) வழங்கப்படவுள்ளது.நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, இராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஸங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இந்த வழக்கில் அரசுத் தரப்பினால் 2,309 சாட்சிகள் சாட்சியமளித்துள்ளனர். நீண்டகாலமாக இடம்பெற்ற வழக்கு விசாரணைகள் கடந்த மாதம் 24ஆம் திகதி நிறைவடைந்தன.இதனைத் தொடர்ந்து, வழக்கின் அனைத்து விசாரணைகளையும் ஆராய்ந்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், தீர்ப்பை நாளை (22) வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.இதனால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடரப்பட்ட இந்த முக்கிய வழக்கின் தீர்ப்பு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement