ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் வெளிப்படைத்தன்மையான விசாரணை நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதாகத் தெரிவித்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ, மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டார்.
அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவும் அதே பாதையில் சென்றுள்ளார்.
குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னணி தொடர்பான உண்மையை வெளிப்படுத்தாதிருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினரைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் தாம் உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் ஆராயப்படும் சஜித் உறுதி ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் சர்வதேச புலனாய்வாளர்களின் உதவியுடன் வெளிப்படைத்தன்மையான விசாரணை நடத்தப்பட்டு அதனுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதாகத் தெரிவித்து ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷ, மக்களை ஏமாற்றும் வகையில் செயற்பட்டார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவும் அதே பாதையில் சென்றுள்ளார். குறித்த மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னணி தொடர்பான உண்மையை வெளிப்படுத்தாதிருப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வாளர்கள் உள்ளிட்ட தரப்பினரைப் பயன்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனப் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் தாம் உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.