• Nov 17 2024

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமயக்க கிழக்கு ஆளுனர் முயற்சி: கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

Tamil nila / Aug 15th 2024, 7:19 pm
image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமாக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவாக கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் இணைந்து செயற'படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் இன்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

திருக்கோணேஸ்வரம் என்பது சைவ மக்களுடைய வரலாற்று தொன்மை மிக்க ஒரு அடையாளம். தமிழர்களின் பழமையான வரலாற்றை பறை சாற்றும் அடையாளமாக விளங்குகின்றது. அவ் ஆலயத்தை முழுமையாக கையகப்படுத்தி சிங்கள பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டும் என பேரினவாதிகள் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றனர். திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரும், அதன் மக்களும் அதற்கு எதிராக கடுமையதாக போராடி வருகிறார்கள். இவ்வாறான நிலையில் அந்த ஆலய நிர்வாக சபைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி ஆலய நிர்வாக சபை மீது சேறுபூசி அந்த நிர்வாக சபையை அகற்றி விட்டு ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கான சதி முயற்சிகள் நடைபொறுகிறது.

அண்மைக் காலத்தில் அந்த ஆலய நிர்வாகத்தில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் பூதாகரமாகபப்டுத்தப்பட்டுள்ளது. ஆலய பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் முகமாக பரப்புரைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஆளுனருடைய அலுவலகத்தால் இவ்வாறான செய்திகளை பரப்பி அவதூறைகளை ஏற்படுத்தி ஆலய நிர்வாகத்தினருக்கு நெருக்கடியை  கொடுத்து அவர்கள் தாமாகவே அதில் இருந்து விலகிச் செல்கின்ற அல்லது பொது மக்களை தூண்டி அவர்களை அகற்றிவிட்டு அதனை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆளுனர் அலுவலம் செய்து கொண்டிருக்கின்றது. மிக நீண்ட காலமாக நிர்வாக சபை கட்டுக்கோப்புடன் செயற்பட்ட நிலையில் அதனைக் குழப்பி அதற்குள் நுழைய அரச தரப்பு தீவிரமாக முயல்கிறது. அந்த முயற்சியின் ஒரு கருவியாக ஆளுனர் செந்தில் தொண்டமான் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.

இந்த நிர்வாக சபையை கலைத்து புதிய இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்த ஆளுனர் எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இடைக்கால நிர்வாகத்தில் தன்னையும் ஒரு அங்கத்தவராக இணைக்க வேண்டும் என அவர் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் ஆலய நிர்வாகத்தாலும், வழிபாட்டு சபையாலும்  குற்றம் சாட்டப்பட்டுளடளது. ஆலய நிர்வாகத்திற்கு தெரியாது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக ஆளுனர் அலுவலகத்தால் கூட்டம் கூட்டப்பட்டு அது குழப்பத்தில் முடிவடைந்தது.

திருகோணேஸ்வரர் ஆலயத்தை கையகப்படுத்துவதற்கும், அதனை சீரழிப்பதற்கும் ஆளுனர் முன்னெடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அரதசாங்கத்தின் முகவராகவும், அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்து கொண்டு அவர் நிர்வாகத்தில் நுழைவதை ஏற்க முடியாது. சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகளை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் இருப்பை காப்பாற்ற முதுகெலும்பு அற்ற ஆளுனர் ஆலயத்தை தாரை வார்க்க எடுக்கும் முயற்சிகளை ஏற்க முடியாது. ஆளுனர் அங்கு இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கூறும் கருத்துக்கள் கூட அடிப்படையற்ற கருத்துக்கள். அது தொடர்பில் உண்மையான விசாரணை தேவை. தொல்பொருட் திணைக்களத்தை வலிந்து இழுக்கும் செயற்பாட்டை ஆளுனர் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.


திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமயக்க கிழக்கு ஆளுனர் முயற்சி: கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை சிங்கள பௌத்தமாக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவாக கிழக்கு ஆளுனர் செந்தில் தொண்டமானுக்கும் இணைந்து செயற'படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம் தொடர்பில் இன்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,திருக்கோணேஸ்வரம் என்பது சைவ மக்களுடைய வரலாற்று தொன்மை மிக்க ஒரு அடையாளம். தமிழர்களின் பழமையான வரலாற்றை பறை சாற்றும் அடையாளமாக விளங்குகின்றது. அவ் ஆலயத்தை முழுமையாக கையகப்படுத்தி சிங்கள பௌத்த அடையாளமாக மாற்ற வேண்டும் என பேரினவாதிகள் கங்கணம் கட்டி செயற்பட்டு வருகின்றனர். திருக்கோணேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரும், அதன் மக்களும் அதற்கு எதிராக கடுமையதாக போராடி வருகிறார்கள். இவ்வாறான நிலையில் அந்த ஆலய நிர்வாக சபைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி ஆலய நிர்வாக சபை மீது சேறுபூசி அந்த நிர்வாக சபையை அகற்றி விட்டு ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கான சதி முயற்சிகள் நடைபொறுகிறது.அண்மைக் காலத்தில் அந்த ஆலய நிர்வாகத்தில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் பூதாகரமாகபப்டுத்தப்பட்டுள்ளது. ஆலய பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் முகமாக பரப்புரைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஆளுனருடைய அலுவலகத்தால் இவ்வாறான செய்திகளை பரப்பி அவதூறைகளை ஏற்படுத்தி ஆலய நிர்வாகத்தினருக்கு நெருக்கடியை  கொடுத்து அவர்கள் தாமாகவே அதில் இருந்து விலகிச் செல்கின்ற அல்லது பொது மக்களை தூண்டி அவர்களை அகற்றிவிட்டு அதனை கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆளுனர் அலுவலம் செய்து கொண்டிருக்கின்றது. மிக நீண்ட காலமாக நிர்வாக சபை கட்டுக்கோப்புடன் செயற்பட்ட நிலையில் அதனைக் குழப்பி அதற்குள் நுழைய அரச தரப்பு தீவிரமாக முயல்கிறது. அந்த முயற்சியின் ஒரு கருவியாக ஆளுனர் செந்தில் தொண்டமான் இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயம்.இந்த நிர்வாக சபையை கலைத்து புதிய இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்த ஆளுனர் எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இடைக்கால நிர்வாகத்தில் தன்னையும் ஒரு அங்கத்தவராக இணைக்க வேண்டும் என அவர் அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் ஆலய நிர்வாகத்தாலும், வழிபாட்டு சபையாலும்  குற்றம் சாட்டப்பட்டுளடளது. ஆலய நிர்வாகத்திற்கு தெரியாது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முரணாக ஆளுனர் அலுவலகத்தால் கூட்டம் கூட்டப்பட்டு அது குழப்பத்தில் முடிவடைந்தது.திருகோணேஸ்வரர் ஆலயத்தை கையகப்படுத்துவதற்கும், அதனை சீரழிப்பதற்கும் ஆளுனர் முன்னெடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அரதசாங்கத்தின் முகவராகவும், அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்து கொண்டு அவர் நிர்வாகத்தில் நுழைவதை ஏற்க முடியாது. சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகளை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களின் இருப்பை காப்பாற்ற முதுகெலும்பு அற்ற ஆளுனர் ஆலயத்தை தாரை வார்க்க எடுக்கும் முயற்சிகளை ஏற்க முடியாது. ஆளுனர் அங்கு இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் கூறும் கருத்துக்கள் கூட அடிப்படையற்ற கருத்துக்கள். அது தொடர்பில் உண்மையான விசாரணை தேவை. தொல்பொருட் திணைக்களத்தை வலிந்து இழுக்கும் செயற்பாட்டை ஆளுனர் செய்யக் கூடாது எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement