• Dec 27 2024

எட்கா உடன்படிக்கை; உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்- ஜனாதிபதியிடம் கம்மன்பில கோரிக்கை..!

Sharmi / Dec 19th 2024, 3:11 pm
image

எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிடகோட்டையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இன்றைய தினம்(19)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் ஜனாதிபதி அனுரகுமாரவும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமாரவும் வித்தியாசமானவர்களா..? என கேள்வியெழுப்பிய உதய கம்மன்பில,  

எட்கா உடன்படிக்கைக்கு நாங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.

இதன் உண்மைத் தன்மையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அத்தோடு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்தும் அரசாங்கம் ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தார்.


எட்கா உடன்படிக்கை; உண்மைத் தன்மையை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துங்கள்- ஜனாதிபதியிடம் கம்மன்பில கோரிக்கை. எட்கா உடன்படிக்கையின் உண்மைத் தன்மையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.பிடகோட்டையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இன்றைய தினம்(19)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டின் ஜனாதிபதி அனுரகுமாரவும் ஜே.வி.பி தலைவர் அனுரகுமாரவும் வித்தியாசமானவர்களா. என கேள்வியெழுப்பிய உதய கம்மன்பில,  எட்கா உடன்படிக்கைக்கு நாங்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.இதன் உண்மைத் தன்மையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.அத்தோடு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்தும் அரசாங்கம் ஆராய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement