• May 23 2026

"வினைத்திறன் மிக்க ஆசிரியர்" நூல் வெளியீட்டு விழா!

shanu / Oct 31st 2025, 9:50 pm
image

மூதூரைச் சேர்ந்த எம்.எல்.எம்.முபாறக்  எழுதிய "வினைத்திறன் மிக்க ஆசிரியர்" எனும் நூல் வெளியீட்டு விழா மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (31) மாலை இடம்பெற்றது.


இந் நூலானது லத்தீப் பவண்டேசனினால் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு  கிழக்கு மாகாண சட்ட அதிகாரி எம்.எல்.பைஸர் தலைமையிலும் இடம்பெற்றது.


நவீன உலகத்துக்கு ஏற்ப எவ்வாறு ஒரு ஆசிரியர் தன்னை தயார்படுத்த வேண்டும் என்கின்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஆசிரியர்களுக்காக இவ் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டடுள்ளது.


இந் நூலுக்கான எற்புரையை ஓய்வு பெற்ற அதிபரும்,எழுத்தாளருமான யோகானந்தன் கனகசூரியம் வழங்கினார்.


நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர கலந்து கொண்டதுடன் நூலாசிரியரிடமிருந்து முதல் பிரதியையும் பெற்றுக் கொண்டார்.பின்னர் ஏனையவர்களுக்கு நூல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 


ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர்,மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர்,தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா,மூதூர் அமைப்பாளர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள், இலக்கியவாதிகள்,நூலாசிரியரின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

"வினைத்திறன் மிக்க ஆசிரியர்" நூல் வெளியீட்டு விழா மூதூரைச் சேர்ந்த எம்.எல்.எம்.முபாறக்  எழுதிய "வினைத்திறன் மிக்க ஆசிரியர்" எனும் நூல் வெளியீட்டு விழா மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (31) மாலை இடம்பெற்றது.இந் நூலானது லத்தீப் பவண்டேசனினால் வெளியீட்டு வைக்கப்பட்டதோடு  கிழக்கு மாகாண சட்ட அதிகாரி எம்.எல்.பைஸர் தலைமையிலும் இடம்பெற்றது.நவீன உலகத்துக்கு ஏற்ப எவ்வாறு ஒரு ஆசிரியர் தன்னை தயார்படுத்த வேண்டும் என்கின்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஆசிரியர்களுக்காக இவ் நூல் வெளியீட்டு வைக்கப்பட்டடுள்ளது.இந் நூலுக்கான எற்புரையை ஓய்வு பெற்ற அதிபரும்,எழுத்தாளருமான யோகானந்தன் கனகசூரியம் வழங்கினார்.நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர கலந்து கொண்டதுடன் நூலாசிரியரிடமிருந்து முதல் பிரதியையும் பெற்றுக் கொண்டார்.பின்னர் ஏனையவர்களுக்கு நூல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர்,மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர்,தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா,மூதூர் அமைப்பாளர்கள்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள், இலக்கியவாதிகள்,நூலாசிரியரின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement