ஈதுல் அல்ஹா புனித நோன்பு பெருநாள் தொழுகை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (31) சிறப்பாக நடைபெற்றது.
ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது.
இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.
மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது.
அல்ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இவ் நோன்பு பெருநாள் தொழுகை இடம்பெற்றது.
தொழுகையினை மௌலவி அப்துல் லத்தீப் நிகழ்த்தியிருந்தார்.
தொழுகையில் அதிகளவான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டதோடு தொழுகை நிறைவடைந்ததும் பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.
பள்ளிவாசலின் பிரதான மௌளவி ஃபர்கானால் விசேட தொழுகை நடத்தப்பட்டது.
மேலும் பெருந்திரளான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டு, பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் சிறப்பாக நடைபெற்ற புனித நோன்பு பெருநாள் தொழுகை ஈதுல் அல்ஹா புனித நோன்பு பெருநாள் தொழுகை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று (31) சிறப்பாக நடைபெற்றது.ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது. இதன் போது மருதமுனை தாறுல் ஹுதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன.மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை நோன்புப் பெருநாள் திடல் தொழுகை இடம்பெற்றது.அல்ஹஸனாஹ் சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் இவ் நோன்பு பெருநாள் தொழுகை இடம்பெற்றது.தொழுகையினை மௌலவி அப்துல் லத்தீப் நிகழ்த்தியிருந்தார்.தொழுகையில் அதிகளவான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டதோடு தொழுகை நிறைவடைந்ததும் பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. வவுனியா பட்டானிச்சூர் பெரிய பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெற்றிருந்தது.பள்ளிவாசலின் பிரதான மௌளவி ஃபர்கானால் விசேட தொழுகை நடத்தப்பட்டது.மேலும் பெருந்திரளான இஸ்லாமியர்கள் தொழுகையில் கலந்து கொண்டு, பெருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.