இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்து வரும் மொட்டு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காத தரப்பினர் இவ்வாறு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டி.வீ.சானக்க, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்ச, அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத் ஆகியோர் இவ்வாறு தங்களது இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது அமைச்சு பதவிகளை வகிப்பது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதேவேளை, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு அறிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்க தயாராகும் எட்டு மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகித்து வரும் மொட்டு கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிகளை துறக்க தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காத தரப்பினர் இவ்வாறு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.டி.வீ.சானக்க, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்ச, அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணவீர மற்றும் சிறிபால கம்லத் ஆகியோர் இவ்வாறு தங்களது இராஜாங்க அமைச்சு பதவிகளை துறக்கத் தீர்மானித்துள்ளனர்.அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது அமைச்சு பதவிகளை வகிப்பது பொருத்தமற்றது என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.இதேவேளை, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சிக்கு அறிவித்துள்ளார்.தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் அரசியல் தீர்மானங்களை எடுக்க வேண்டாம் என கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இதன்போது தெரிவித்துள்ளார்.