• Apr 02 2025

4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய வயோதிபர்!

Chithra / Nov 10th 2024, 12:28 pm
image

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் நான்கு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

58 வயதான அவர் கொழும்பு - 10, மருதானை பிரதேசத்தில் வசிப்பவராவார்.

அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து விமான நிலைய சுங்க வளாகத்தில் சென்று கொண்டிருந்த போது, ​​தனது உடலின் பின்பகுதியில் இருந்த கைப்பையில் 05 கிலோ போதைப்பொருளை மறைத்து வைத்திருப்பது சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட பயணியையும், அவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

4 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய வயோதிபர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சக்கர நாற்காலியில் பயணித்த வயோதிப பயணி ஒருவர் நான்கு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.58 வயதான அவர் கொழும்பு - 10, மருதானை பிரதேசத்தில் வசிப்பவராவார்.அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்து விமான நிலைய சுங்க வளாகத்தில் சென்று கொண்டிருந்த போது, ​​தனது உடலின் பின்பகுதியில் இருந்த கைப்பையில் 05 கிலோ போதைப்பொருளை மறைத்து வைத்திருப்பது சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட பயணியையும், அவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருளையும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement