• Sep 19 2024

அமைச்சரவை முடிவுகள் குறித்து கடும் அதிருப்தியில் தேர்தல் ஆணையகம்

Chithra / Sep 12th 2024, 12:49 pm
image

Advertisement

 

அமைச்சரவையால், அண்மையில் எடுக்கப்பட்ட  முடிவுகள் குறித்து இலங்கை தேர்தல் ஆணையகம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது,

அதில் சில முடிவுகள் ஒரு வேட்பாளரின் தெளிவான ஒப்புதல்களாக கருதப்படுவதாக ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும்,  அமைச்சரவையின் எந்தவொரு தீர்மானத்தையும் நிறுத்துவதற்கு ஆணையகத்துக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். 

இருப்பினும், சில முடிவுகளை ஒத்திவைக்க, ஆணையகம் பரிந்துரைத்துள்ளது.

உதாரணமாக, சிறப்பு மாதாந்த உதவித்தொகையான 3000 ருபாய் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அதனை, அக்டோபர் மாதத்திற்கு பின் நடைமுறைப்படுத்த ஆணையகம், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, அண்மைய அமைச்சரவை அனுமதிகளை ஒரு வேட்பாளரை ஊக்குவிக்கும் செயல்களாகவே கருதுவதாக, ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகள் குறித்து கடும் அதிருப்தியில் தேர்தல் ஆணையகம்  அமைச்சரவையால், அண்மையில் எடுக்கப்பட்ட  முடிவுகள் குறித்து இலங்கை தேர்தல் ஆணையகம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது,அதில் சில முடிவுகள் ஒரு வேட்பாளரின் தெளிவான ஒப்புதல்களாக கருதப்படுவதாக ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.எனினும்,  அமைச்சரவையின் எந்தவொரு தீர்மானத்தையும் நிறுத்துவதற்கு ஆணையகத்துக்கு அதிகாரம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், சில முடிவுகளை ஒத்திவைக்க, ஆணையகம் பரிந்துரைத்துள்ளது.உதாரணமாக, சிறப்பு மாதாந்த உதவித்தொகையான 3000 ருபாய் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, செப்டெம்பர் முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும் அதனை, அக்டோபர் மாதத்திற்கு பின் நடைமுறைப்படுத்த ஆணையகம், அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.இதேவேளை, அண்மைய அமைச்சரவை அனுமதிகளை ஒரு வேட்பாளரை ஊக்குவிக்கும் செயல்களாகவே கருதுவதாக, ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement