• Nov 28 2024

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்!

Chithra / Sep 9th 2024, 8:51 am
image


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (09) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களின் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதற்காக 5 பேர் மாத்திரமே வீடுகளுக்குச் செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வழிகாட்டல்களில் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்துடன், அரசியல் கட்சிகளுக்கும் காவல்துறையினருக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று (09) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களின் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பதற்காக 5 பேர் மாத்திரமே வீடுகளுக்குச் செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தல் வழிகாட்டல்களில் இது தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், அரசியல் கட்சிகளுக்கும் காவல்துறையினருக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement