ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையிலான 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு நூற்றுக்கு 18 சதவீத மின் கட்டண அதிகரிப்பு அவசியம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நெஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட செலவு ஒப்பீட்டின்படி, ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையிலான 2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு நூற்றுக்கு 18 சதவீத மின் கட்டண அதிகரிப்பு செய்ய வேண்டியது அவசியமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொது மக்களிடம் கருத்துகளைப் பெற்றதன் பின்னர் இதுதொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 09ஆம் திகதி அறிவிக்கப்படுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நூற்றுக்கு 4.3 சதவீதத்திலிருந்து 25.3 சதவீதம் வரையில் மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்காக மின் நுகர்வுக்கான செலவு தொடர்பிலான மதிப்பீடு நெஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் கடந்த 27ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு செலவு உயர்வில் தாக்கம் செலுத்தியுள்ளதுடன் இதில் தமது நிறுவனத்துக்கு 38 பில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, மின்கட்டணம் நூற்றுக்கு 18.11 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளதுடன் 15 பில்லியன் ரூபா மானியம் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதால், இந்த திருத்தம் சமய வழிபாட்டிடங்கள், 180 அலகுக்கு குறைவாக மின்சாரத்தை நுகரும் சுற்றுலா ஹோட்டல்கள், சிறியளவாக தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வீட்டு பயன்பாட்டாளர்களுக்கு நூற்றுக்கு 95 சதவீத மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிலக்கரியின் தரம் குறைவு காரணமாக மேலதிகமான செலவை மின் கட்டணத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு மீதான பொதுமக்களுடனான ஆலோசனைகள் நேற்று(29) முதல் ஆரம்பமானதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நெஷனல் சிஸ்டம் ஒப்பரேடர் நிறுவனம் சமர்ப்பித்த செலவு மதிப்பீடுகளை ஆய்வு செய்த பின்னர், ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்த ஆலோசனைப் பத்திரம் நேற்று (29) வெளியிடப்பட்டது.
இந்த ஆலோசனைப் பத்திரத்தைப் பரிசீலித்து அனைத்துத் தரப்பினரும் தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க முடியும்.
எழுத்துமூல கருத்துகள் 2026 மே 06ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாய்மொழி மூல கருத்துகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இதற்கான அமர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தபால், மின்னஞ்சல், வட்ஸ்அப் அல்லது பெக்ஸ் ஊடாக சமர்ப்பிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாய்மொழி மூல கருத்துகளை முன்வைக்க விரும்புவோர் 076 427 1030 என்ற இலக்கத்தைத் தொடர்புகொண்டு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பெறப்படும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டணம் குறித்த இறுதித் தீர்மானத்தை 2026 மே 09ஆம் திகதி அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் மின் கட்டணம் ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையிலான 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு நூற்றுக்கு 18 சதவீத மின் கட்டண அதிகரிப்பு அவசியம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நெஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட செலவு ஒப்பீட்டின்படி, ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரையிலான 2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு நூற்றுக்கு 18 சதவீத மின் கட்டண அதிகரிப்பு செய்ய வேண்டியது அவசியமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பொது மக்களிடம் கருத்துகளைப் பெற்றதன் பின்னர் இதுதொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 09ஆம் திகதி அறிவிக்கப்படுமென்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நூற்றுக்கு 4.3 சதவீதத்திலிருந்து 25.3 சதவீதம் வரையில் மின் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்காக மின் நுகர்வுக்கான செலவு தொடர்பிலான மதிப்பீடு நெஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தால் கடந்த 27ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு செலவு உயர்வில் தாக்கம் செலுத்தியுள்ளதுடன் இதில் தமது நிறுவனத்துக்கு 38 பில்லியன் ரூபா நட்டத்தை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.அதற்கமைய, மின்கட்டணம் நூற்றுக்கு 18.11 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளதுடன் 15 பில்லியன் ரூபா மானியம் அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளதால், இந்த திருத்தம் சமய வழிபாட்டிடங்கள், 180 அலகுக்கு குறைவாக மின்சாரத்தை நுகரும் சுற்றுலா ஹோட்டல்கள், சிறியளவாக தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வீட்டு பயன்பாட்டாளர்களுக்கு நூற்றுக்கு 95 சதவீத மின் கட்டணத்தை அதிகரிக்காதிருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.நிலக்கரியின் தரம் குறைவு காரணமாக மேலதிகமான செலவை மின் கட்டணத்தில் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.இதனடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்கான விசேட மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவு மீதான பொதுமக்களுடனான ஆலோசனைகள் நேற்று(29) முதல் ஆரம்பமானதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.நெஷனல் சிஸ்டம் ஒப்பரேடர் நிறுவனம் சமர்ப்பித்த செலவு மதிப்பீடுகளை ஆய்வு செய்த பின்னர், ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்த ஆலோசனைப் பத்திரம் நேற்று (29) வெளியிடப்பட்டது.இந்த ஆலோசனைப் பத்திரத்தைப் பரிசீலித்து அனைத்துத் தரப்பினரும் தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் முன்வைக்க முடியும்.எழுத்துமூல கருத்துகள் 2026 மே 06ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் வாய்மொழி மூல கருத்துகள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இதற்கான அமர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை தபால், மின்னஞ்சல், வட்ஸ்அப் அல்லது பெக்ஸ் ஊடாக சமர்ப்பிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.வாய்மொழி மூல கருத்துகளை முன்வைக்க விரும்புவோர் 076 427 1030 என்ற இலக்கத்தைத் தொடர்புகொண்டு முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும்.பெறப்படும் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு, மின்சாரக் கட்டணம் குறித்த இறுதித் தீர்மானத்தை 2026 மே 09ஆம் திகதி அறிவிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.