• Dec 12 2024

ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு!

Chithra / Dec 11th 2024, 9:34 am
image

 

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு மின்சார சபை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. 

ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதால் மின் கட்டண குறைப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். 

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்குக் கடந்த இரண்டு வருடங்களாக ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. 

எனவே, டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக அவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் அண்மையில் தெரிவித்திருந்தார். 

எனினும் இந்த கோரிக்கைக்கு மின்சார சபையின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு மின்சார சபை தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு  இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு மின்சார சபை தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்குவதால் மின் கட்டண குறைப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்குக் கடந்த இரண்டு வருடங்களாக ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவில்லை. எனவே, டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயமாக அவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் இந்த கோரிக்கைக்கு மின்சார சபையின் பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement