• Sep 14 2026

22 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு -54 வயதில் குழந்தை பெற்ற பெண்

Ziya / Sep 14th 2026, 2:57 pm
image

கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்டிருந்த கருவை பயன்படுத்தி, 54 வயதான பெண் ஒருவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 


கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி என்ற பெண், ஏதென்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3.49 கிலோகிராம் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்தார்.


கிறிஸ்டினா மற்றும் அவரது 60 வயது கணவர் கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ், கடந்த ஆண்டு அக்டோபரில் 21 வயதான தங்களது மகன் ஜியோர்ஜோஸ் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு குழந்தையைப் பெற முடிவு செய்தனர். 


இதற்காக, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டிருந்த தங்களது கருவை பயன்படுத்தினர்.


இதற்கிடையில், கிரேக்கத்தில் பெண்கள் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பு 54 ஆண்டுகளாக உள்ளது. 


வயது வரம்பை நெருங்கிய நிலையில், கிறிஸ்டினா சிறப்பு அனுமதி பெற்று சிகிச்சையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தங்கள் மறைந்த மகனின் நினைவாக இந்தக் குழந்தைக்கு “ஜார்ஜியா” என பெயரிட்டுள்ளனர். 


நீண்ட காலம் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவிலிருந்து குழந்தை பிறந்திருப்பது அரிதான நிகழ்வாகக் கருதப்படும் நிலையில், கிரேக்கத்தின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை கருத்தில் கொண்டு செயற்கை கருத்தரிப்புக்கான வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

22 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு -54 வயதில் குழந்தை பெற்ற பெண் கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்டிருந்த கருவை பயன்படுத்தி, 54 வயதான பெண் ஒருவர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி என்ற பெண், ஏதென்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் 3.49 கிலோகிராம் எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்தார்.கிறிஸ்டினா மற்றும் அவரது 60 வயது கணவர் கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ், கடந்த ஆண்டு அக்டோபரில் 21 வயதான தங்களது மகன் ஜியோர்ஜோஸ் சாலை விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு குழந்தையைப் பெற முடிவு செய்தனர். இதற்காக, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டிருந்த தங்களது கருவை பயன்படுத்தினர்.இதற்கிடையில், கிரேக்கத்தில் பெண்கள் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது வரம்பு 54 ஆண்டுகளாக உள்ளது. வயது வரம்பை நெருங்கிய நிலையில், கிறிஸ்டினா சிறப்பு அனுமதி பெற்று சிகிச்சையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தங்கள் மறைந்த மகனின் நினைவாக இந்தக் குழந்தைக்கு “ஜார்ஜியா” என பெயரிட்டுள்ளனர். நீண்ட காலம் உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவிலிருந்து குழந்தை பிறந்திருப்பது அரிதான நிகழ்வாகக் கருதப்படும் நிலையில், கிரேக்கத்தின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை கருத்தில் கொண்டு செயற்கை கருத்தரிப்புக்கான வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement