• Mar 10 2026

காதலனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் மன உளைச்சல்; காதலர் தினத்தில் உயிரை மாய்த்த இளம் யுவதி

Chithra / Feb 15th 2026, 8:01 am
image

கொழும்பு, கடுவெலை பிரதேசத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.


கடுவெலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே மேற்படி யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-


தனது காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் முரண்பாடு காரணமாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார் என்று தெரியவருகின்றது.


இந்த மன உளைச்சல் காரணமாகவே அவர், காதலர் தினமான நேற்று, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


காதலனுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் மன உளைச்சல்; காதலர் தினத்தில் உயிரை மாய்த்த இளம் யுவதி கொழும்பு, கடுவெலை பிரதேசத்தில் 22 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.கடுவெலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலேயே மேற்படி யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-தனது காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் முரண்பாடு காரணமாக அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார் என்று தெரியவருகின்றது.இந்த மன உளைச்சல் காரணமாகவே அவர், காதலர் தினமான நேற்று, தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் எனப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement