சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுடன் நண்பர்கள் போன்று இணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செல்பி எடுத்துள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது வழங்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) காலை இடம்பெற்றது.
விழாவில் 192 சுற்றுச்சூழல் முன்னோடியான மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது மாணவர்களை நண்பர்கள் போன்று அரவணைத்தும் சகஜமாக கலந்துரையாடியும் பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
விருது விழா தொடர்பில் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
2025 சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் நான் கலந்து கொண்டேன்.
192 சுற்றுச்சூழல் முன்னோடியான மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் குறித்து சுற்றுச்சூழல் அறிவுள்ள மாணவர்களை கௌரவிக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இத்தகைய நிகழ்ச்சிகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.- என்று பதிவிட்டுள்ளார்.
குறித்த விழாவில் மாணவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நண்பர்களைப் போன்று சகஜமாக கலந்துரையாடி அரவணைத்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது விழா; மாணவர்களுடன் செல்பி எடுத்த ஜனாதிபதி அநுர சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் மாணவர்களுடன் நண்பர்கள் போன்று இணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செல்பி எடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது வழங்கும் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (21) காலை இடம்பெற்றது. விழாவில் 192 சுற்றுச்சூழல் முன்னோடியான மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதன்போது மாணவர்களை நண்பர்கள் போன்று அரவணைத்தும் சகஜமாக கலந்துரையாடியும் பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். விருது விழா தொடர்பில் ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 2025 சுற்றுச்சூழல் முன்னோடி ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் நான் கலந்து கொண்டேன்.192 சுற்றுச்சூழல் முன்னோடியான மாணவர்களுக்கு ஜனாதிபதி பதக்கங்கள் வழங்கப்பட்டன. அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் குறித்து சுற்றுச்சூழல் அறிவுள்ள மாணவர்களை கௌரவிக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கல்வி அமைச்சினால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் இத்தகைய நிகழ்ச்சிகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.- என்று பதிவிட்டுள்ளார். குறித்த விழாவில் மாணவர்களுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நண்பர்களைப் போன்று சகஜமாக கலந்துரையாடி அரவணைத்து அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.