• Oct 01 2026

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியே செல்லும் நிகழ்வு

Aathira / Oct 1st 2026, 6:56 am
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ஐந்தாம் கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சேவை நாடிகள் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள குறுகியகால புனர்வாழ்வு நிலையத்தில் புதன்கிழமை(30) நடைபெற்றது.

தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரியுமான கலாநிதி ப.தினேஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “முழு நாடும் ஒன்றாக தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு செயற்றிட்டம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புனர்வாழ்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குறுகியகால சிகிச்சை உளவியல் ஆலோசனைகள் நடத்தை மாற்றப் பயிற்சி தொழில்திறன் மேம்பாடு மற்றும் சமூகத்தில் மீள இணைவதற்கான புனர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.

''நீங்கள் தனியாக இல்லை – நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்  இங்கே மாற்றம் உருவாகிறது" என்ற தொனிப்பொருளின் கீழ் இயங்கிவரும் இந்நிலையம் இலங்கையில் தமிழ் மொழி மூலமாக முழுமையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் முதல் மத்திய நிலையமாகத் திகழ்கிறது.

இதன்போது ஐந்தாம் கட்ட பயிற்சியை நிறைவு செய்தோருக்கு  அவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் மீண்டும் இணைவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் உரையாற்றிய அதிகாரிகள் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீண்டவர்களை சமூகத்தில் புறக்கணிக்காமல் அவர்களுக்கு புதிய ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும்.

இதன் போது புனர்வாழ்வு என்பது சிகிச்சையுடன் முடிவடையும் செயல்முறை அல்ல சமூகத்தில் நிலையான வாழ்க்கையை உருவாக்கும் தொடர்ச்சியான பயணமாகும் என சுட்டிக்காட்டினர்.

அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதனால் கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 2,90,000 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில்  வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.ஜபீர். உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யருள், பொலிஸ் பரிசோதகர் ஜெயசேகரம், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் உளநல உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இப்பயிற்சிகள் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்து சுயதொழில் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் அல்லது முறைப்பாடுகளை பொதுமக்கள் 1927 என்ற உதவி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்பதும் இந்நிகழ்வில் நினைவூட்டப்பட்டன.

மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையிலிருந்து புனர்வாழ்வு பெற்று வெளியே செல்லும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட ஐந்தாம் கட்ட குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த சேவை நாடிகள் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு கல்லடி பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள குறுகியகால புனர்வாழ்வு நிலையத்தில் புதன்கிழமை(30) நடைபெற்றது.தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், குறுகியகால சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரியுமான கலாநிதி ப.தினேஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் “முழு நாடும் ஒன்றாக தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு செயற்றிட்டம்" என்ற தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புனர்வாழ்வு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.அதன் ஒரு அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குறுகியகால சிகிச்சை உளவியல் ஆலோசனைகள் நடத்தை மாற்றப் பயிற்சி தொழில்திறன் மேம்பாடு மற்றும் சமூகத்தில் மீள இணைவதற்கான புனர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.''நீங்கள் தனியாக இல்லை – நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்  இங்கே மாற்றம் உருவாகிறது" என்ற தொனிப்பொருளின் கீழ் இயங்கிவரும் இந்நிலையம் இலங்கையில் தமிழ் மொழி மூலமாக முழுமையான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்கும் முதல் மத்திய நிலையமாகத் திகழ்கிறது.இதன்போது ஐந்தாம் கட்ட பயிற்சியை நிறைவு செய்தோருக்கு  அவர்கள் சமூகத்தில் சுயமரியாதையுடனும் தன்னம்பிக்கையுடனும் மீண்டும் இணைவதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.இந்நிகழ்வில் உரையாற்றிய அதிகாரிகள் போதைப்பொருள் பாவனையிலிருந்து மீண்டவர்களை சமூகத்தில் புறக்கணிக்காமல் அவர்களுக்கு புதிய ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும்.இதன் போது புனர்வாழ்வு என்பது சிகிச்சையுடன் முடிவடையும் செயல்முறை அல்ல சமூகத்தில் நிலையான வாழ்க்கையை உருவாக்கும் தொடர்ச்சியான பயணமாகும் என சுட்டிக்காட்டினர்.அரசாங்கம் போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதனால் கடந்த வருடம் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சுமார் 2,90,000 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிகழ்வில்  வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.ஜபீர். உதவி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் யருள், பொலிஸ் பரிசோதகர் ஜெயசேகரம், போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் உளநல உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.இப்பயிற்சிகள் மூலம் அவர்களை மீண்டும் சமூகத்துடன் இணைத்து சுயதொழில் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் அல்லது முறைப்பாடுகளை பொதுமக்கள் 1927 என்ற உதவி இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்பதும் இந்நிகழ்வில் நினைவூட்டப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement