• Feb 03 2025

2025ம் ஆண்டில் வெளிநாட்டவர்கள் 100 குழந்தைகளை மாத்திரம் தத்தெடுக்க அனுமதி!

Chithra / Feb 3rd 2025, 11:43 am
image

 

2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தத்தெடுப்புகளை 100 ஆகக் கட்டுப்படுத்தும் வர்த்தமானி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், 2025 ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான தத்தெடுப்பு உத்தரவுகளின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த திட்டம் இலங்கையில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் வெளிநாட்டு நபர்களுக்கு பொருந்துகிறது.

இலங்கை குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கின்றனர்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், விண்ணப்பம் செய்யப்படும் குழந்தையை விட 21 வயதுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய உச்ச வரம்பு குறித்து அறிவிக்கப்படும்.

இந்தநிலையிலேயே இந்த ஆண்டுக்கான வர்த்தமானி அறிவிப்பும் அண்மையில் வெளியாகியுள்ளது.

2025ம் ஆண்டில் வெளிநாட்டவர்கள் 100 குழந்தைகளை மாத்திரம் தத்தெடுக்க அனுமதி  2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தத்தெடுப்புகளை 100 ஆகக் கட்டுப்படுத்தும் வர்த்தமானி ஒன்று அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், 2025 ஆம் ஆண்டுக்கான குழந்தைகள் தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு விண்ணப்பதாரர்களுக்கான தத்தெடுப்பு உத்தரவுகளின் எண்ணிக்கையை 100 ஆகக் கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்த திட்டம் இலங்கையில் உள்ள குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் வெளிநாட்டு நபர்களுக்கு பொருந்துகிறது.இலங்கை குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் வெளிநாட்டு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நன்னடத்தை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கின்றனர்.விண்ணப்பதாரர்கள் ஒவ்வொருவரும் 25 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், விண்ணப்பம் செய்யப்படும் குழந்தையை விட 21 வயதுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அத்தகைய உச்ச வரம்பு குறித்து அறிவிக்கப்படும்.இந்தநிலையிலேயே இந்த ஆண்டுக்கான வர்த்தமானி அறிவிப்பும் அண்மையில் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement