பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தம்பசிட்டி வீதியை இணைக்கும் இணைப்பு வீதி ஒன்று நகரசபையினால் புனரமைப்பு செய்யப்பட்டமை தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நகரசபை தவிசாளர் தன்னிச்சையான செயற்பாடாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு நகரசபை உறுப்பினர் எஸ்.பொன்னம்பலம் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் விளக்கமளித்துள்ளார்.
இதன்போது தமிழ்த்தேசிய பேரவையை சேர்ந்த இரு நகரசபை உறுப்பினர்களும் உடனிருந்தனர்.
குறித்த இணைப்பு வீதி புனரமைப்பு தொடர்பில் நிதிக்குழுவில் ஆரயப்பட்டு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முன்மொழிந்தும் ஈபிடிபி உறுப்பினர் வழிமொழிந்தும் இருந்தனர் என குறிப்பிட்டார்.
பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கம் பருத்தித்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தம்பசிட்டி வீதியை இணைக்கும் இணைப்பு வீதி ஒன்று நகரசபையினால் புனரமைப்பு செய்யப்பட்டமை தொடர்பில் சில ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நகரசபை தவிசாளர் தன்னிச்சையான செயற்பாடாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு நகரசபை உறுப்பினர் எஸ்.பொன்னம்பலம் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். இதன்போது தமிழ்த்தேசிய பேரவையை சேர்ந்த இரு நகரசபை உறுப்பினர்களும் உடனிருந்தனர். குறித்த இணைப்பு வீதி புனரமைப்பு தொடர்பில் நிதிக்குழுவில் ஆரயப்பட்டு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் முன்மொழிந்தும் ஈபிடிபி உறுப்பினர் வழிமொழிந்தும் இருந்தனர் என குறிப்பிட்டார்.