• Nov 26 2024

நாளை இலங்கை வரும் இந்திய வௌிவிவகார அமைச்சர் - மோடியின் விஜயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள்!

Chithra / Jun 19th 2024, 9:25 am
image


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் நாளைய தினம் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது.

இந்தியாவில் கூட்டணி அரசாங்கம் மீண்டும் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கை வரும் அவர் இலங்கையில் பல்வேறு தரப்பினரைச் சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரை நாளை சந்திக்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும், 

மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகின்றமை குறித்து இந்த சந்திப்புகளில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டார்.

மேலும் இந்தியாவின் முதலீட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நாளை இலங்கை வரும் இந்திய வௌிவிவகார அமைச்சர் - மோடியின் விஜயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் நாளைய தினம் இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரியவருகின்றது.இந்தியாவில் கூட்டணி அரசாங்கம் மீண்டும் அமைக்கப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக இலங்கை வரும் அவர் இலங்கையில் பல்வேறு தரப்பினரைச் சந்திக்கவுள்ளார்.இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரை நாளை சந்திக்கவுள்ளார்.அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும், மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகின்றமை குறித்து இந்த சந்திப்புகளில் முக்கிய அவதானம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி குறிப்பிட்டார்.மேலும் இந்தியாவின் முதலீட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement