சுற்றுலா தினத்தின் நிலைபேறான மாற்றம் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
வடமாகாண சுற்றுலாப்பணியகமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்வுக்கு முன்னதாக பண்பாட்டு பவனி காக்கா கடைச்சந்தியிலிருந்து பசுமைப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பாரம்பரிய நடனங்களும் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன. சுளகு நடனம், மயில் நடனம், ஒயிலாட்டம், கும்மி, நாடகங்கள் எனப் பலவகையான பாரம்பரிய நிகழ்வுகள் ஆற்றுகைப்படுத்தப்பட்டன.
சிறியவர்கள் முதல் உயர்தர மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆற்றுகைகளை வெளிப்படுத்தினர்.
சிறியவர்கள், பெரியவர்களது ஆற்றுகைகளும் அலங்காரங்களும் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் வகையில் அமைந்தது.
வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன், கெளரவ விருந்தினராக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் ஏ. வேலமாலிகிதன், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மேலதிக மாவட்ட செயலாளர் நளாயினி இன்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கண்களை கவர்ந்த பாரம்பரிய நடனங்கள்; வீதியில் வியந்து பார்த்த மக்கள் கிளிநொச்சியில் நடந்த நிகழ்வு சுற்றுலா தினத்தின் நிலைபேறான மாற்றம் என்ற தொனிப்பொருளில் உலக சுற்றுலா தினம் கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் நேற்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண சுற்றுலாப்பணியகமும் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வுக்கு முன்னதாக பண்பாட்டு பவனி காக்கா கடைச்சந்தியிலிருந்து பசுமைப்பூங்கா வரை முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் பாரம்பரிய நடனங்களும் பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றன. சுளகு நடனம், மயில் நடனம், ஒயிலாட்டம், கும்மி, நாடகங்கள் எனப் பலவகையான பாரம்பரிய நிகழ்வுகள் ஆற்றுகைப்படுத்தப்பட்டன. சிறியவர்கள் முதல் உயர்தர மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆற்றுகைகளை வெளிப்படுத்தினர். சிறியவர்கள், பெரியவர்களது ஆற்றுகைகளும் அலங்காரங்களும் பார்ப்பவர்களின் கண்களைக் கவரும் வகையில் அமைந்தது. வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் எஸ். முரளிதரன், கெளரவ விருந்தினராக கரைச்சி பிரதேச சபை தவிசாளர் ஏ. வேலமாலிகிதன், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மேலதிக மாவட்ட செயலாளர் நளாயினி இன்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.