• Jun 28 2024

பரீட்சையில் தோல்வி; திட்டிய தாயையும் சகோதரனையும் கொலை செய்த கொடூரன்

Chithra / Jun 23rd 2024, 3:26 pm
image

Advertisement

 

இந்தியா - தமிழ்நாட்டின் திருவொற்றியூரில் பரீட்சையில் தோல்வியடைந்த இளைஞன் ஒருவர் திட்டிய தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த இரட்டைக் கொலை சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளதையடுத்து, இன்றையதினம்  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் இளங்கலைப் பிரிவில் கல்வி பயிலும் 20 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவ தினத்தன்று குறித்த இளைஞன் தனது பாட்டிக்கு இரண்டு நாட்களில் தனது வீட்டுக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பியதையடுத்து தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்ட பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

அத்துடன், 45 வயதுடைய பெண்ணும் அவருடைய 15 வயது மகனுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில், தனது தந்தை ஓமானில் பணிபுரிவதாக சந்தேகநபர் கூறியுள்ளார்.

மேலும், பரீட்சையில் தோல்வியடைந்த தன்னை திட்டியதால் தாயை கொன்றதோடு,

தனது சகோதரன் அநாதை ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவரையும் கொன்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.


பரீட்சையில் தோல்வி; திட்டிய தாயையும் சகோதரனையும் கொலை செய்த கொடூரன்  இந்தியா - தமிழ்நாட்டின் திருவொற்றியூரில் பரீட்சையில் தோல்வியடைந்த இளைஞன் ஒருவர் திட்டிய தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.குறித்த இரட்டைக் கொலை சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றுள்ளதையடுத்து, இன்றையதினம்  சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் இளங்கலைப் பிரிவில் கல்வி பயிலும் 20 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த இளைஞன் தனது பாட்டிக்கு இரண்டு நாட்களில் தனது வீட்டுக்கு வருமாறு குறுஞ்செய்தி அனுப்பியதையடுத்து தலைமறைவாகியுள்ளார்.இந்நிலையில், சம்பவம் தொடர்பாக அறிந்துகொண்ட பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.அத்துடன், 45 வயதுடைய பெண்ணும் அவருடைய 15 வயது மகனுமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விசாரணையில், தனது தந்தை ஓமானில் பணிபுரிவதாக சந்தேகநபர் கூறியுள்ளார்.மேலும், பரீட்சையில் தோல்வியடைந்த தன்னை திட்டியதால் தாயை கொன்றதோடு,தனது சகோதரன் அநாதை ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவரையும் கொன்றதாக சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement